புதுடெல்லி: பா.ஜ.வில் இருந்து விலகிய கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பாவுக்கு ஆதரவாக 13 எம்எல்ஏக்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். மேலும் பல எம்எல்ஏக்கள் அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா, கடந்த 30ம் தேதி பா.ஜ.வில் இருந்து விலகினார். எம்எல்ஏ பதவியையும் ராஜினாமா செய்தார். இதையடுத்து, ‘கர்நாடக ஜனதா கட்சி’ என்ற புதிய கட்சியை நேற்று முறைப்படி தொடங்கினார். முன்னதாக நேற்று காலை தனது ஆதரவாளர்களுக்கு அவர் விருந்தளித்தார். அதில் 21 எம்எல்ஏக்கள், 4 எம்.பி.க்கள் கலந்து கொண்டனர். எடியூரப்பாவுக்கு ஆதரவு தெரிவித்து 13 எம்எல்ஏக்கள் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளனர். இவர்களை தவிர 30க்கும் அதிகமான எம்எல்ஏக்கள் எடியூரப்பாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். தற்போது 224 உறுப்பினர்களை கொண்ட கர்நாடக சட்டசபையில் பா.ஜ.வுக்கு 118 உறுப்பினர்களும், காங்கிரசுக்கு 71, மதசார்பற்ற ஜனதா தளத்துக்கு 26, சுயேச்சைகள் 7 பேர் உள்ளனர்.http://www.tamilmurasu.org/index.asp
இரண்டு இடங்கள் காலியாக உள்ளன. சுமார் 50 எம்எல்ஏக்கள் எடியூரப்பா கட்சிக்கு தாவுவதால் பெரும்பான்மையை இழந்து விட்ட ஜெகதீஷ் ஷெட்டர் அரசு உடனடியாக பதவி விலக வேண்டும் என காங்கிரசும், மதசார்பற்ற ஜனதா தளமும் கோரிக்கை வைத்துள்ளன. கர்நாடக சட்டசபையை கலைத்து விட்டு தேர்தலை சந்திக்க தயாரா என எடியூரப்பாவும் பா.ஜ. மேலிடத்துக்கு சவால் விடுத்துள்ளார். இந்நிலையில், கர்நாடக சட்டசபையை கலைப்பது குறித்து பா.ஜ மேலிடம் தீவிர ஆலோசனை செய்து வருகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக