செவ்வாய், 11 டிசம்பர், 2012

தமிழச்சி தங்கப்பாண்டியன்.மனசில் என்ன இருக்கு...?

சென்னை: தமிழ்த் திரையுலகில் நுழையப் போகிறது ஒரு அழகு முகம், தமிழ் முகம் என்பதுதான் லேட்டஸ்ட் கிசுகிசுவாக உள்ளது. அந்த அழகு முகத்துக்குரியவர், தமிழச்சி தங்கப்பாண்டியன்.
திமுக வட்டாரத்தில் பிரபலமானவர் தமிழச்சி. கல்லூரிப் பேராசிரியை, கவிதாயினி, பேச்சாளினி என்பது தவிர அரசியல் ஆர்வம், இலக்கிய ஆர்வம் மிகுந்தவர் என்பதும் இவரது கூடுதல் அடையாளங்கள்.
அழுத்தம் திருத்தமாக, ஆணித்தரமாக, அருமையாக பேசக் கூடிய ஒரு தமிழ்ப் பெண். மறத் தமிழச்சியான இவர் இப்போது சினிமா விழாக்களில் அடிக்கடி வலம் வர ஆரம்பித்துள்ளார்.

நீர்ப்பறவை ஆடியோ வெளியீட்டின்போது இருந்தார். வெற்றிச்செல்வன் ஆடியோ, நர்த்தகி ஆடியோ வெளியீடு, பூர்வகுடி ஆடியோ வெளியீடு, இயக்குநர் சீனு ராமசாமி புத்தக வெளியீடு என இவரை சினிமா பக்கம் அடிக்கடி பார்க்க முடிகிறது.
சினிமாவில் கவிஞராக அறிமுகமாக இவர் முயற்சித்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன. இல்லை, இல்லை வசனகர்த்தாவாக மாறப் போகிறார் என்று ஒரு தகவல் கூறுகிறது. படம் இயக்கத்தான் ஆழம் பார்த்து வருகிறார் தமிழச்சி என்று சொல்வோரும் உண்டு.
எதுவாக இருந்தால் என்ன, 'அன்னியர்களின்' ஆக்கிரமிப்பில் சிக்கியிருக்கும் தமிழ் சினிமாவில் ஒரு 'தமிழச்சி' வந்து விட்டுத்தான் போகட்டுமே...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக