திங்கள், 24 டிசம்பர், 2012

Damini தாமினி..டில்லி பஸ் பலாத்கார மாணவிக்கு போராட்டக்காரர்கள் வைத்த பெயர்

Viruvirupu

டெல்லியில் ஓடும் பேருந்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட மருத்துவ படிப்பு மாணவிக்காக வீதிகளில் இறங்கி போராடும் பல்லாயிரக்கணக்கான போராட்டக்காரர்கள், அந்த மாணவிக்கு தாமினி என்று பெயர் வைத்துள்ளனர்.
பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, இரும்புக் கம்பியால் தாக்கப்பட்டு வீசப்பட்ட அந்த மாணவிக்கு டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் நேற்று வரை 6 அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டன. இந்த சம்பவத்தை கண்டித்து டெல்லியில் ஏராளமானோர் கடந்த 2 நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட மாணவியின் பெயர் வெளியிடப்படவில்லை. அதையடுத்து போராட்டக்காரர்கள், பாதிக்கப்பட்ட மாணவிக்கு தாமினி என்று பெயர் வைத்துள்ளனர். அவர்கள் தங்கள் கையில் வைத்திருந்த அட்டைகளில் ‘போராடு தாமினி, நாங்கள் உன்னுடன் இருக்கிறோம்’ என்று எழுதி வைத்திருந்தனர்.

தாமினி என்னும் இந்தி படம் கடந்த 1993-ம் ஆண்டு ரிலீஸ் ஆனது. அதில் கற்பழிக்கப்பட்ட பெண்ணுக்கு நியாயம் கிடைக்க போராடும் கதாநாயகியின் பெயர் தான் தாமினி. அந்த பெயரைத் தான் டெல்லி மாணவிக்கு வைத்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக