புதன், 12 டிசம்பர், 2012

விஜயகாந்த்தை திமுக தேடுவதால், ஜெயலலிதாவை சந்திக்கிறார் வடிவேலு?

சென்னை: முதல்வர் ஜெயலலிதாவை விரைவில் நேரில் சந்திக்கவுள்ளார் வைகைப் புயல் வடிவேலு என்று தகவல்கள் கூறுகின்றன. ஜெயலலிதாவை சந்திக்க நேரம் கேட்டு வடிவேலு கடிதம் கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது. கடந்த சட்டசபைத் தேர்தலுக்கு முன்பாக தடாலடியாக திமுகவுக்கு ஆதரவாக மாறினார் வடிவேலு. தேர்தல் பிரசாரத்தின்போது ஊர் ஊராக போய் விஜயகாந்த்தை கடுமயாக தாக்கிப் பேசி வந்தார். அவரது பேச்சுக்கு ஊரெங்கும் மகத்தான கூட்டமும் கூடியது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக தேர்தலில் திமுக படு தோல்வியைத் தழுவியது. மறுபக்கம் விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவராகி விட்டார்.http://tamil.oneindia.in/

தேர்தலுக்குப் பின்னர் வடிவேலு படங்களில் நடிக்காமல் ஒதுங்கி விட்டார். அவரைத் தேடிப் படங்களும் வரவில்லை, அவரும் வாய்ப்பு தேடி போகவில்லை. இந்த நிலையி்ல தற்போது நிலைமை மோச்மாகியுள்ளது. அதாவது எந்த வடிவேலுவை நம்பி கடந்த தேர்தலை சந்தித்ததோ திமுக, அந்த வடிவேலு மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசிய விஜயகாந்த்தை நாடி இப்போது போக ஆரம்பித்திருக்கிறது. இது வடிவேலுவை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளதாம்.
இவங்களுக்காகத்தானே நாம் ஊர் ஊராகப் போய் பிரசாரம் செய்தோம், இவங்களுக்காகத்தானே பொழப்பைக் கூட அடமானம் வச்சு ரிஸ்க்கெல்லாம் எடுத்தோம். இப்போது விஜயகாந்த்தைப் போய் கூட்டணிக்காக பேச ஆரம்பித்து விட்டார்களே என்று வடிவேலு நொந்து போயிருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில்தான் அவர் முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க நேரம் கேட்டு கடிதம் அனுப்பியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜெயலலிதாவை சந்திக்க வாய்ப்பு கிடைத்தால் அவரிடம் நேரில் போய் மனம் விட்டுப் பேசி பகிரங்கமாகவே அதிமுகவில் இணைந்து விடுவது என்ற முடிவில் இருக்கிறாராம் வடிவேலு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக