எல்லோரும் சாதாரண மனிதர்களே. இவர்கள் கொண்டாடும் இந்த பெரிய மனிதர்கள அனேகமாக சொந்த வாழ்வில் மிகவும் கேவலமான சுய நலமிகளாக இருக்கிறார்கள். தங்கள் திரைப்படங்களுக்கு இலவச விளம்பரம் செய்யும் ரசிகர் பட்டாளத்தை அப்படியே முட்டாள்களாக வைத்திருப்பார்கள் ஆனால் அந்த களவு தெரிந்து விடக்கூடாது என்று சதா இரவல் வாங்கிய தத்துவ கருத்துக்களை பொழிந்து தள்ளுவார்கள். இந்த மாதிரி ஹீரோ பக்தியை திறமையாக தக்க வைத்துகொள்ளும் ஒரு நடிகனை விட அவனை கடவுளாக என்னும் முட்டாள் ரசிகனைக் நினைத்தால் என்ன செய்வது சிலர் சில நல்ல காரியங்களை சத்தம் போடாமல் செய்கிறார்கள் அவர்களை இந்த தமிழ் சமுகம் கண்டு கொள்வதே இல்லை. உதாரணமாக Traffic Ramasamy என்கின்ற ஒரு பெரியவர் இருக்கிறார். அவர் தனி நபராக நின்று எத்தனையோ பொது நல வழக்குகள் மூலம் சமுகத்தில் பெரும் சாதனைகளை நிகழ்த்தி கொண்டிருக்கிறார் இந்த பொது காரியங்களுக்காக அவர் இழந்தது சொல்லி மாளாது சென்னையில் அவரை தெரியாத வக்கீல்களோ அரசியல் வாதிகளோ இருக்க முடியாது சென்னையில் பொது மக்களை பாதிக்கும் எத்தனையோ விடயங்களில் மக்களுக்காக சொந்த செலவில் நீதிமன்ற படி ஏறியவர் இந்த சினிமா நடிகன் எவனாவது இதுபோன்ற நல்ல செயல்களுக்கு உதவியாவது செய்திருக்கின்றான?
சினிமாவும் அரசியலும் கிரிகெட்டும் தான் கவர்சிகரமான லாலி பாப் என்றாகிவிட்டன. குழந்தைகள் எப்படி அந்த குச்சு குச்சு மிட்டா ய்களின் இனிப்பு தீர்ந்து போய்விட்டாலும் அதன் வெறும் தடியை சூப்பி கொண்டு இருப்பதுபோல ரசிகர்கள் எனப்படும் ஐந்தறிவுகளின் அலப்பறை தாங்க முடியல்ல .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக