தேர்தலின்போது தொகுதி கேட்டு பேரம்பேசவே ஜாதி தலைவர்களை அணி திரட்டும் ராமதாஸ்: திருமா தாக்கு Posted by: Siva
தர்மபுரியில் நடந்த சாதிக் கலவரம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி சென்னையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
அந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் பேசியதாவது,
ஒடுக்கப்பட்ட தலித் மக்களுக்கு எதிராக பிற ஜாதி அமைப்புகளின் கூட்டத்தை நடத்தியுள்ளார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ். அந்த கூட்டத்தில் தமிழகத்தில் தீண்டாமை கொடுமை முற்றிலும் ஒழிக்கப்பட்டுவிட்டதாகவும், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.http://tamil.oneindia.in/
என் பின்னால் இத்தனை ஜாதி அமைப்புகள் உள்ளன. அவர்களின் வாக்குகள் வேண்டுமானால் எங்களுக்கு இத்தனை தொகுதிகள் தர வேண்டும் என்று தேர்தல் நேரத்தில் பேரம் பேசத் தான் ராமதாஸ் ஜாதி தலைவர்களை ஒன்று திரட்டி வருகிறார் என்றார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக