திங்கள், 3 டிசம்பர், 2012

ப.சிதம்பரம் பிரதமர் பதவிக்கான வேட்பாளர்...?

டெல்லி: அடுத்த மக்களவைத் தேர்தல் அடுத்த ஆண்டிலா? அல்லது 2014-ம் ஆண்டிலா என்ற விவாதம் ஒரு பக்கம் ஓடிக் கொண்டிருக்க...காங்கிரஸ் சார்பில் யார் பிரதமர்? பாஜக சார்பில் யார் பிரதமர்? என்ற அலசல் அலைகளும் அடித்துக் கொண்டிருக்கின்றன...
2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் கூட்டணிக் கட்சிகளின் தயவில் எப்படியும் ஆட்சி அமைத்துவிடுவோம் என்ற கனவில் இருக்கிறது காங்கிரஸ் கட்சி. இந்தக் கட்சியைப் பொருத்தவரையில் பிரதமர் மன்மோகன்சிங்குக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்குமா? என்ற கேள்வி ஒருபுறம் இருக்க.. "ராகுல்" காந்தியை பிரதமராக்க வேண்டும் என்பது காங்கிரசின் 'பொதுப் புத்தி" யாகவே இருக்கிறது...
மன்மோகன்சிங், ராகுல்காந்தி ஆகிய இருவருக்கும் அப்பால்.... உச்சரிக்கப்படுவது அல்லது உச்சரிக்கப்பட வைக்கும் ஒரு பெயர் "ப.சிதம்பரம்". நன்றாக வலது கையை பாருங்கள் குரு மேடு சூரிய மேடு சனி மேடு புதன் எல்லாமே நன்றாக இருக்கிறது உயர பறக்க  சான்ஸ் இருக்கிறது http://tamil.oneindia.in/
காங்கிரஸ் கட்சியில் கால் நூற்றாண்டு காலத்துக்கு முன்பே அதாவது இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட போதே பிரதமர் ப்தவிக்கு ஆசைப்பட்டவர் பிரணாப் முகர்ஜி.. அவரது வாழ்நாள் லட்சியம் நிறைவேறவில்லை. அதற்கு பதிலாக கிடைத்ததுதான் குடியரசுத் தலைவர் பதவி...
காங்கிரஸ் "மூத்த தலைவர்கள்" பட்டியலில் இருந்து பிரணாப் முகர்ஜி வெளியேறியதுதான் தாமதம்.. அந்த இடத்துக்கு யார் என்பதில் ரகளையான போட்டியே நடந்தேறியது. அமைச்சரவையில் தமக்கே பிரதமருக்கு அடுத்த இடம் என்று போர்க்கொடி தூக்கினார் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார். இதற்கு பெரும்பாடுபட்டு சமாதானப்படுத்தியது காங்கிரஸ்..
இருப்பினும் ப.சிதம்பரத்தை முன்னிறுத்தும் லாபிகளோ, பிரணாப் வெளியேறிவிட்டதால் "ரூட்" கிளியராகிவிட்டது என்றுதான் கொண்டாடின...
இதற்கும் மேலாக ப. சிதம்பரத்தை எப்படியாவது 'பிரதமர்' பதவியில் அமர்த்திவிட வேண்டும் என்று துடியாய் துடிக்கின்றன பன்னாட்டு நிறுவனங்கள்.. இதை வெளிப்படுத்தும் விதமாகவே பிரபல பொருளாதார பத்திரிகையான லண்டனிலிருந்து வெளியாகும் "தி எக்கனாமிஸ்ட்" இதழ், ராகுல் காந்தியைவிட ப.சிதம்பரமே இந்தியாவின் பிரதமர் பதவிக்கு மிகவும் பொருத்தமானவர் என்று கூறியுள்ளது.
"தி எக்கானமிஸ்ட்" இதழில் கூறப்பட்டிருப்பது என்ன?
இந்தியாவின் தற்போதைய சூழலில் பொருளாதார வளர்சியில் அக்கறை செலுத்தும் ப.சிதம்பரமே அடுத்த பிரதமர் பதவிக்கான சரியான தேர்வாக இருக்க முடியும். 2014 மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு தற்போதைய பிரதமர் மன்மோகன்சிங் 80 வயதை கடந்துவிடுவார்.. ராகுல் காந்தியோ இன்னும் பிரதமர் பதவிக்கு தயாராக இல்லை. இந்தியாவை வழிநடத்தி செல்லக் கூடிய தகுதி சிதம்பரத்துக்கே இருக்கிறது.. ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் சோனியா காந்தியின் ஆதரவும் ப.சிதம்பரத்துக்கு இருக்கிறது... அவரால்தான் தற்போதைய பொருளாதார சவால்களுக்கு முகம் கொடுக்க முடியும் என்கிறது தி எக்கானமிஸ்ட்.

எக்கானமிஸ்ட் லாபி உள்ளிட்டவை ஒருபுறமிருக்க... பிரதமர் மன்மோகன்சிங்கே இதற்கான 'லாபி'யில் மும்முரம் காட்டுவதாகவும் கூறப்படுகிறது. மன்மோகன்சிங்கின் "ஆத்மார்த்த" சீடராக.. பன்னாட்டு நிறுவனங்களின் ஒரு "கையாக" சிதம்பரம் செயல்படுவார் என்பதுதான் அவரது நம்பிக்கை..ப.சிதம்பரம் வெளிப்படையாகவே பன்னாட்டு நிறுவனங்களோடு கை கோர்த்து செயல்படக் கூடியவர். பிரபல வேதாந்தா குழுமங்களில் இயக்குனர் நிலையில் இருந்தவரும் கூட என்பது நாடறிந்த விஷயம்.
அதே நேரத்தில் இப்படி பிரதமர் வாய்ப்பு வரும் நிலையில் ராகுல்காந்தி 'விட்டு' கொடுப்பாரா? என்ற கேள்வியும் ப.சிதம்பரம் "லாபி"களிடம் எழாமல் இல்லை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக