செவ்வாய், 11 டிசம்பர், 2012

இப்போது ஜெயலலிதாவுக்கு களங்கம்! நக்கீரன் கோபால் மீது அவதூறு வழக்கு

சென்னை: நக்கீரன் வார இதழில் முதல்வர் ஜெயலலிதா தொடர்பான செய்தியைத் தொடர்ந்து ஆசிரியர் கோபால் மீது தமிழக முதல்வர் ஜெயலலிதா சார்பில் அவதூறு வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சென்னை முதன்மை செஷன்ஸ் கோர்ட்டில் அரசு வழக்கறிஞர் ஜெகன் தாக்கல் செய்துள்ள மனுவில், கடந்த 5-ம் தேதி வெளியான நக்கீரன் பத்திரிக்கையில் அதிமுகவை கலக்கும் நிழல் முதல்வர்கள் என்ற தலைப்பில் செய்தி வெளியாகி இருந்தது. இந்த செய்தி அடிப்படை ஆதாரமற்றது. உண்மைக்கு புறம்பானது. வேண்டும் என்றே உள்நோக்கத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.
அரசுக்கும், முதல்வருக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் அவதூறு செய்தி வெளியிடப்பட்டு உள்ளது. இந்த செய்தியை வெளியிட்ட பத்திரிகை ஆசிரியரும், பதிப்பாளருமான நக்கீரன் கோபால், இணை ஆசிரியர் காமராஜ் ஆகியோர் மீது கிரிமினல் அவதூறு சட்டத்தில் தண்டிக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக