ஞாயிறு, 9 டிசம்பர், 2012

கமலஹாசன் பேரன் முறையான நந்தனை ஹாலிவுட் டில் அறிமுகபடுத்துகிறார்

சென்னை: உலக நாயகன் கமல் ஹாசன் இயக்குனர் மணிரத்னத்தின் மகனை வைத்து ஒரு திட்டம் தீட்டியுள்ளாராம். கமலஹாசனின் அண்ணன் மகளான சுகாசினி மணிரத்னத்தின் மனைவி என்பது அறிந்ததே இன்னும் அறியாவிட்டால் இப்போது அறிந்து கொள்ளுங்கள் இனி தமிழகத்தின் எல்லா மீடிஆக்களும் நந்தன் தான் அடுத்த கமல் என்று ஒப்பாரி வைக்கக்கூடும்  எல்லாம் நமது பாக்கியம்
கமல் ஹாசன் தனது விஸ்வரூபம் படத்தை ரிலீஸ் செய்துவிட்டு அடுத்ததாக ஹாலிவுட் படத்தில் நடிக்கிறார் என்று அனைவருக்கும் தெரியும். பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளர் பாரி ஆஸ்பர்னுடன் சேர்ந்து கமல் பணியாற்றவிருக்கிறார். உலக தரத்தில் படம் எடுக்கும் உலக நாயகனை ஹாலிவுட் படத்தில் பார்க்க ரசிகர்கள் பேராவலாக உள்ளனர்.

இந்நிலையில் கமல் இயக்குனர் மணிரத்னத்தின் மகன் நந்தனை தன்னுடன் ஹாலிவுட் அழைத்துச் செல்ல திட்டமிட்டுள்ளார் என்று கூறப்படுகிறது. இது வரை சினிமா உலகை விட்டு விலகியே இருக்கும் நந்தன் கமல் மூலம் அதுவும் ஹாலிவுட் போகிறார் என்ற செய்தி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. பேரன் முறையான
நந்தன் கமலின் ஹாலிவுட் படத்தில் தயாரிப்பு ஒருங்கிணைப்பாளரக பணியாற்றுவார் என்று தெரிகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக