வெள்ளி, 21 டிசம்பர், 2012

காட்டுக்குள் இருந்து பள்ளி மாணவி உடல் மீட்பு

காட்டுக்குள் இருந்து பள்ளி மாணவி உடல் மீட்பு : கிராம மக்கள் மறியல்<தூத்துக்குடி மாவட்டம் செய்துங்க நல்லூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட கருங்குளம் கிராமம்,  இதன் அருகே உள்ள தாதன்குளத்தில் வசிப்பவர் பேச்சியம்மாள். இவரது கணவர் சவுந்தரராஜன் ஏற்கனவே காலமாகிவிட்டார்.  இவரது இரண்டு பிள்ளைகள் புனிதா( வயது 13), கிராமத்தில் உள்ள பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்தார்.   நேற்று காலை வழக்கம் போல் பள்ளிக்கு சென்ற புனிதா வீடு திரும்பவில்லை. மாலையில் அவரது தாய் பேச்சியம்மாள் அவளைத்தேடியபோது காணாமல் போகவே, போலீசில் புகார் செய்தார்.  அதோடு அக்கம் பக்கம் தேடியும் அவள் கிடைக்கவில்லை.  இதனிடையே தாதன்குளம் இலாக்குளம் இடையே உள்ள காட்டில் சிறுமி புனிதாவின் சடலம் கிடப்பது தெரியவரவே போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.>சிறுமி புனிதா கற்பழித்து கொலை செய்து வீசப்பட்டாளா? என போலீசார் விசாரணை செய்து வருகின்றன.
குற்றவாளிகளை  உடனே கைது செய்ய வேண்டும் என்று கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டுள்ளனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக