வெள்ளி, 21 டிசம்பர், 2012

விஸ்வரூபம் திரையிட மறுப்பு ! திரையரங்குகள் BIG NO

கமல் தயாரித்து நடித்துள்ள விஸ்வரூபம் திரைப்படத்தை டிடிஎச்சில் ஒலிபரப்ப முடிவு செய்துள்ளதால், இந்தப் படத்தை திரையரங்குகளில் திரையிட முடியாது என திரையரங்கு உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
வெள்ளிக்கிழமை இன்று இறுதி முடிவு எடுக்கப்படும் என்று கூறியிருந்த திரைப்பட விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள், இந்தப் பிரச்னை தொடர்பாக நடந்த அவசரக் கூட்டத்தில் இந்த முடிவினை எடுத்துள்ளனர்  எனக்கென்னவோ திரைஅரங்கு முதலாளிகள் மட்டும் இந்த முடிவை எடுக்கவில்லை பின்னணியில் black ticket மற்றும் திருட்டு vcd எல்லாவற்றிலும் மேலாக அரசியல் கட்சி குண்டர்கள் போன்ற எல்லோரும் இருப்பதாக தோன்றுகிறது  அவர்கள் விஸ்வரூபத்தை பார்த்து பயப்படுகிறார்கள்  ம்ம்ம் விஸ்வரூபம் நிச்சயம் கமலை காப்பற்றும் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக