புதன், 12 டிசம்பர், 2012

மலலா உலக குழந்தைகளின் கல்வி முன் மாதிரி

பாக்: மலலாவை தேசத்தின் மகளாக அரசு பிரகடனம் செய்ய வலியுறுத்தி தீர்மானம்

இஸ்லாமாபாத்.டிச.11 -தலிபான்களுக்கு எதிராக கருத்து தெரிவித்ததற்காக துப்பாக்கிச் சூட்டுக்கு ஆளானவர் மலலா. தற்போது இங்கிலாந்தில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார். அண்மையில் பாகிஸ்தான் அதிபர் சர்தாரி, இங்கிலாந்து சென்று அந்த சிறுமியை பார்த்து வந்தார்.
இந்நிலையில் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் ஆளும் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் எம்.பி. ரோபினா, மலலாவை தேசத்தின் மகளாக அரசு பிரகடனம் செய்ய வலியுறுத்தி தீர்மானம் கொண்டுவந்தார். மலலாதான் உலகம் முழுவதும் குழந்தைகளின் கல்வி உரிமையை வலியுறுத்துவதற்கான முன் மாதிரி என்றும் அவர் புகழாரம் சூட்டினார்.
இந்தத் தீர்மானம் ஒருமனதாக பார்லிமெண்டில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக