சென்னை: தமிழறிஞரான பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் மனைவி தாமரை அம்மையார் (வயது 79) சென்னையில் இன்று காலமானார்.
பாவலரேறு பெருஞ்சித்திரான் தனித் தமிழ் இயக்கத்தைச் சேர்ந்தவர். மறைமலையடிகளார் மற்றும் பாவாணர் ஆகியோரிடம் கொள்கைகளை கற்று பரப்பியவர். இவரது மறைவுக்குப் பிறகு துணைவியார் தாமரை அம்மையார் அப்பணியைத் தொடர்ந்து மேற்கொண்டு வந்தார்.
பாவலரேறு நினைவாக சென்னை நினைவாக மேடவாக்கத்தில் பாவலரேறு தமிழ்க் களம் என்ற நினைவகத்தை உருவாக்கி அதன் வழியே தமிழ்த் தொண்டாற்றி வந்தார். பெருஞ்சித்திரனார் நடத்தி வந்த தென்மொழி ஏட்டை தொடர்ந்து நடத்தினார்.
அண்மையில்தான் பெருஞ்சித்திரனாரின் மருமகன் திருக்குறள் மணி இறைக்குருவனார் காலமானார். இந்நிலையில் பெருஞ்சித்திரனாரின் துணைவியார் தாமரை அம்மையார் காலமாகியிருப்பது தமிழர் ஆர்வலர்களை பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
தாமரை பெருஞ்சித்திரனார் அம்மையாரின் இறுதி ஊர்வலம் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்குச் சென்னை மேடவாக்கம் பாவலரேறு தமிழ்க்களத்திலிருந்து புறப்படும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக