வெள்ளி, 7 டிசம்பர், 2012

விஸ்வரூபம் டிடிஎச் உரிமை ரூ 50 கோடிக்கு sale

: விஸ்வரூபம் படத்தின் டிடிஎச் உரிமை ரூ 50 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கமல் எழுதி, இயக்கி, நடித்து தயாரித்துள்ள விஸ்வரூபம் படம் வரும் ஜனவரி 11-ம் தேதி வெளியாகிறது.
ஆனால் தியேட்டர்களில் வெளியிட்டு லாபம் பார்ப்பது சிரமம் என்பதால், தியேட்டர்களில் வெளியாவதற்கு முன்பே டிடிஎச் மூலம், தொலைக்காட்சிகளில் ஒளிபரப்ப கமல் திட்டமிட்டுள்ளார்.
இது தயாரிப்பாளர்கள் மற்றும் தியேட்டர் உரிமையாளர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை உருவாக்கியுள்ளது. ஆனால் படத்தின் தயாரிப்பாளர் என்ற முறையில், தன் படத்தின் வர்த்தகத்தை தீர்மானிக்கும் உரிமை தனக்கே உள்ளது என்று கூறியுள்ள கமல், டிடிஎச் முயற்சியில் தீவிரம் காட்டி வருகிறார்.
முதல் கட்டமாக முன்னணி டிடிஎச் சேவை வழங்கும் ஏர்டெல் மற்றும் ஸ்டார் குழுமத்துக்கு இந்தப் படத்தை ரூ 50 கோடிக்கு விற்றுள்ளதாகத் தெரிகிறது.
தியேட்டருக்கு வருவதற்கு 8 மணி நேரம் முன்பே டிடிஎச்சில் விஸ்வரூபத்தைப் பார்த்துவிடலாம். பின்னர் தியேட்டர்களில் பார்க்கலாம். அனைத்து ஏரியாக்களிலும் கமல்ஹாஸனே ரிலீஸ் செய்கிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக