வெள்ளி, 21 டிசம்பர், 2012

நித்யஸ்ரீயின் கணவர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தார்'


பிரபல பாடகி நித்யஸ்ரீ மகாதேவனின் கணவர் மகாதேவன் சென்னை அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தின் பின்னணி குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
மகாதேவனின் தாயார், சில மாதங்களுக்கு முன்பு காலமாகிவிட்டார். அதையடு்த்து அவர் கடும் மன உளைச்சலால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், அதற்கு அவர் சிகிச்சை பெற்று வந்ததாகவும் நித்யஸ்ரீ வாக்குமூலம் அளித்திருப்பதாகக் கூறப்படுகிறது.
அதையடுத்து, மகாதேவனின் மருத்துவ சிகிச்சை தொடர்பான ஆவணங்களைப் பெற்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நித்யஸ்ரீக்கும் அவரது கணவருக்கும் கருத்து வேறுபாடுகள் இருந்ததாக ஒரு பக்கம் கூறப்பட்டாலும், அதை அவரது குடும்பத்தினர் மறுத்திருக்கிறார்கள். இருவருக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லை என்றும், அவரது தற்கொலை அதிர்ச்சியளிப்பதாகவும் நித்யஸ்ரீயின் தந்தை சிவகுமார் கூறியிருக்கிறார்.
நேற்று மகாதவேன் அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தை, நித்யஸ்ரீதான் தனக்கு தொலைபேசி மூலம் தெரிவித்ததாகவும், இனி என்ன செய்யப் போகிறேன் என்று கதறியதாகவும் சிவகுமார் கூறியுள்ளார்.
சிவகுமாரின் தாய் டி.கே. பட்டம்மாள். அதனால் அவரது குடும்பம் பாரம்பரியமாக இசைக்குடும்பத்தைச் சேர்ந்தது. அத்துடன், மகாதேவனின் குடும்பமும் இசைக்குடும்பம் என்றும், அவரது தாயாரும் பல கச்சேரிகளை நடத்தியிருப்பதாகவும் சிவகுமார் கூறியுள்ளார்.
நித்யஸ்ரீக்கு தேஜாஷீ (8), தனுஜாஷீ (6) ஆகிய இரண்டு மகள்கள் உள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக