சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீடு தொடர்பாக இன்று மாநிலங்களவையில் விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய மாயாவதி பேசியதாவது:-
நாங்கள் எப்போதெல்லாம் மத்திய அரசுக்கு ஆதரவாக வாக்களிக்கிறோமோ
அப்போதெல்லாம் சிபிஐ-க்கு பயந்து நடிக்கிறோம் என்று கூறுகிறார்கள். சிபிஐ
அழுத்தம் காரணமாகவே நாங்கள் மக்களவையில் இருந்து வெளிநடப்பு செய்ததாக
சுஷ்மா சுவராஜ் கூறினார். அந்த குற்றச்சாட்டை மறுக்கிறேன்.
பகுஜன் சமாஜ் கட்சிக்கு எதிராக அவர் கூறிய அந்த வார்த்தை கடுமையாக
கண்டிக்கத்தக்கது. பா.ஜனதா ஆட்சியில் இருந்தபோது, அரசியல் எதிரிகள் மீது
சிபிஐ அமைப்பை தவறாக பயன்படுத்தியது. அன்னிய முதலீடு தொடர்பான
வாக்கெடுப்பில் மத்திய அரசுக்கு ஆதரவாக பகுஜன் சமாஜ் கட்சி வாக்களிக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
மாயாவதியின் இந்த அறிவிப்பு ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு ஆறுதல் அளித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக