வியாழன், 6 டிசம்பர், 2012

திரைஅரங்குகள் போர்க்கொடி விஸ்வரூபம் டிவியில் வெளியிட எதிர்ப்பு

கமலின் விஸ்வரூபம் விவகாரம் அனல் பறக்கிறது! இன்று மாலை அவசர கூட்டம்!< “எனது படம், எனது வியாபாரம்” விஸ்வரூபம் படம் தியேட்டர்களில் வெளியாவதற்கு 8 மணி நேரத்துக்கு முன் டி.வி.யில் ஒளிபரப்பாகும் என்று கமல் எடுத்துள்ள முடிவால், அவருக்கு எதிராக திரையரங்க உரிமையாளர்கள் திரள ஆரம்பித்துள்ளனர்.
விஸ்வரூபம் மற்றும் கமல் மீது அடுத்து என்ன நடவடிக்கை மேற்கொள்வதென முடிவு செய்ய இன்று திரையரங்கு உரிமையாளர்களின் அசாதாரண கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில், கமலின் விஸ்வரூபம் படத்தை தியேட்டர்களில் வெளியிட மறுப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.
தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர் சம்மேளனத் தலைவர் அபிராமி ராமநாதன், “கமலஹாஸனின் முடிவை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. இது மிகவும் சீரியஸான விவகாரம். சினிமா தியேட்டர்களின் எதிர்காலத்தை கடுமையாக பாதிக்கக் கூடியது என்பதால், அசாதாரண கூட்டத்தைக் கூட்டியுள்ளோம். இன்று மாலை கூட்டத்தில் பேசி முடிவெடுப்போம்” என்றார்.

ஆனால் கமல், இதற்கெல்லாம் மசிகிறவர் அல்ல என்கிறார்கள். விஸ்வரூபம் படம், படம் அவருடைய சொந்தத் தயாரிப்பு. அதை எப்படி வியாபாரம் செய்ய வேண்டும் என முடிவு செய்யும் உரிமையும் அவருக்கே உண்டு என்பதே அவரது நிலைப்பாடு. திரையரங்கு உரிமையாளர்களின் அவசர கூட்டம் பற்றி எந்தக் கவலையுமின்றி, பட வேலையில் அவர் இறங்கியுள்ளார் என்று கூறப்படுகிறது.
பார்க்கலாம், திரையரங்கு உரிமையாளர்களால் எதுவரை போக முடியும் என்பதை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக