செவ்வாய், 25 டிசம்பர், 2012

கற்பழிப்பு குற்றவாளிகள் பலர் அமைச்சர்களாகவும் உள்ளனர்


உத்தர் பிரதேசில்   48 அமைச்சர்களில், 26 பேர், குற்ற பின்னணி உடையவர்கள்.
லக்னோ :"உ.பி.,யில், அகிலேஷ் யாதவ் தலைமையிலான, சமாஜ்வாதி அமைச்சரவையில், இடம் பெற்றுள்ள, 48 அமைச்சர்களில், 26 பேர், குற்ற பின்னணி உடையவர்கள். இவர்களில், நான்கு பேர் மீது, கற்பழிப்பு, கொலை, கடத்தல் போன்ற வழக்குகள் உள்ளன' என, ஜனநாயகத்துக்கான சீர்திருத்த அமைப்பு தெரிவித்துள்ளது.ஜனநாயகத்துக்கான சீர்திருத்த அமைப்பான, ஏ.டி.ஆரின், நிறுவனர், திரிலோச்சன் சாஸ்திரி, தேசிய தேர்தல் கண்காணிப்பகமான, என்.இ.டபிள்யூ.,வின், உ.பி., மாநில ஒருங்கிணைப்பாளர், சஞ்சய் சிங் ஆகியோர், நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:உ.பி.,யில், அகிலேஷ் யாதவ் தலைமையிலான, சமாஜ்வாதி கட்சி ஆட்சி நடக்கிறது. உ.பி.,யில், நடந்து முடிந்த சட்டசபை தேர்தலின்போது, "மாநிலத்தில், சட்டம்-ஒழுங்கை, மேம்படுத்துவதே, எங்களின் முதல் குறிக்கோள்'என்ற கோஷத்தை, அகிலேஷ் யாதவ், முன் வைத்தார்.ஆனால், தற்போது, அவரது அமைச்சரவையில் இடம் பிடித்துள்ளவர்களில், 54 சதவீதம் பேர், குற்றப் பின்னணி உடையவர்கள் என, தெரியவந்துள்ளது. சட்டசபை தேர்தலில், சமாஜ்வாதி கட்சி சார்பில் போட்டியிட்டவர்கள், வேட்பு மனு தாக்கல் செய்தபோது, தங்களின் சொத்து விவரம், தங்கள் மீதுள்ள வழக்குகள் ஆகியவை குறித்தும், அதில் தெரிவித்துள்ளனர்.


இதை ஆய்வு செய்தபோது, குற்றப் பின்னணி உடையவர்களை பற்றிய விவரம் தெரியவந்தது. உ.பி.,யில், மொத்தம், 48 அமைச்சர்கள் உள்ளனர். இவர்களில், 26 பேர் மீது, பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. கற்பழிப்பு, கொலை, கொலை முயற்சி, கடத்தல் ஆகிய வழக்குகள் உள்ள, ஐந்து அமைச்சர்களும், இதில் அடக்கம்.ஜவுளித் துறை இணை அமைச்சர், மெகபூப் அலிக்கு எதிராக, கொலை முயற்சி, கொள்ளை, கடத்தல் உள்ளிட்ட, 15 வழக்குகள் உள்ளன. உணவுத் துறை அமைச்சர், ரகுராஜ் பிரதாப் சிங் என்ற ராஜா பையாவுக்கு எதிராக, எட்டு வழக்குகள் உள்ளன.கிராமப்புற மேம்பாட்டு இணை அமைச்சர், அரவிந்த் சிங் கோப்புக்கு எதிராக, மூன்று வழக்குகள் உள்ளன. முத்திரைத் தாள் துறை இணை அமைச்சர், மனோஜ் குமார் சிங் பராசிற்கு எதிராக, கற்பழிப்பு வழக்கு உள்ளது.

இந்த, 48 அமைச்சர்களில், 38 பேர், கோடீஸ்வரர்கள் என்ற விவரமும், அவர்கள் தாக்கல் செய்துள்ள, சொத்து பட்டியல் மூலமாக தெரியவந்துள்ளது. அதிகபட்சமாக, விவசாய அமைச்சர், குவார் ஆனந்த் சிங்கிற்கு, 18 கோடி ரூபாய் சொத்து உள்ளது.போக்குவரத்து அமைச்சர் ராஜா மகேந்திரா அரித்மான் சிங்கிற்கு, 15 கோடி ரூபாய் சொத்து உள்ளது. முதல்வர் அகிலேஷ் யாதவுக்கு, ஐந்து கோடி ரூபாய் தான் சொத்து உள்ளதாம்.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.dinamalar.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக