செவ்வாய், 25 டிசம்பர், 2012

AP Cong Leader பெண்கள் இஷ்டத்திற்கு திரியக்கூடாதாம்

ஐதராபாத் :"" நம் நாட்டுக்கு நள்ளிரவில் சுதந்திரம் கிடைத்தது என்பதற்காக, பெண்கள், நள்ளிரவில், இஷ்டத்துக்கு சுற்றித் திரியக் கூடாது,'' என, ஆந்திர மாநில காங்., தலைவர் சத்யநாராயணா கூறியதற்கு கடும் எதிர்ப்பு எழுந்ததை அடுத்து, தான் பேசியதற்கு, அவர் வருத்தம் தெரிவித்தார்.
ஆந்திர மாநில, காங்., தலைவரும், மாநில போக்குவரத்து அமைச்சருமான, பொஸ்தா சத்யநாராயணா, செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:நம் நாட்டுக்கு, நள்ளிரவில் சுதந்திரம் கிடைத்தது உண்மை தான். அதற்காக, நள்ளிரவில், ஊர் சுற்றக் கூடாது. குறிப்பாக, பெண்கள், நள்ளிரவில், வெளியில் சுற்றுவது, ஆபத்தானது. நள்ளிரவு நேரங்களில், தனியார் பஸ்களில் பயணிக்காமல் இருப்பதும், நல்லது தான்.இவ்வாறு சத்யநாராயணா கூறினார்.
இவரின் பேச்சுக்கு, கடும் எதிர்ப்பு எழுந்தது. குறிப்பாக, பல்வேறு அரசியல் கட்சியினரும், எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, மாலையில், மீண்டும் செய்தியாளர் கூட்டத்தை கூட்டினார். அப்போது, அவர் கூறியதாவது:நானும், ஒரு தந்தை தான்; எனக்கும், குழந்தைகள் உள்ளன. ஒரு தந்தையாக, என் கோபத்தை வெளிப்படுத்தினேன். டில்லியில் நடந்த கற்பழிப்பு சம்பவம், என்னை மிகவும் பாதித்துள்ளது. இது, கண்டனத்துக்குரியது. நாட்டையே, இந்த சம்பவம் உலுக்கியுள்ளது. நான் தெரிவித்த கருத்து, பெண்களின் உணர்வுகளை புண்படுத்தியிருந்தால், அதற்காக வருந்துகிறேன். பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு, மத்திய, மாநில அரசுகள், நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு சத்யநாராயணா கூறினா dinamalar.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக