ஞாயிறு, 23 டிசம்பர், 2012

நித்தியானந்தா சொகுசுக் கப்பலில் சிஷ்யைகளுக்கு



Viruvirupu,
கப்பலின் உட்புற கேபின்
அருணகிரிநாதர், “நித்தியானந்தவை மதுரை ஆதீனத்தை விட்டு வெட்டி வெளியே அனுப்பி விட்டேன்” என அறிவித்த பின், தமிழ்நாட்டில் இருக்க பிடிக்காமலும், கர்நாடகாவுக்கு போக விருப்பம் இல்லாமலும் இருந்த நித்தி சுவாமிகள் தற்போது போய் லேன்ட் பண்ணியுள்ள இடம், சிங்கப்பூர்!
கப்பலின் உட்புற கேபின்இன்று (சனிக்கிழமை) அவர் சிங்கப்பூர் கடலில் சொகுசுக் கப்பலில் இருக்கிறார். சிஷ்யர்களுக்கும், சிஷ்யைகளுக்கும் (அவர்கள் இல்லாமலா?) சொகுசுக் கப்பலில் ஸ்பெஷல் பயிற்சி கொடுக்கிறார் அவர்.
இந்த சிறப்பு பயிற்சிக்கு பெயர், ‘கல்பதரு’. ஒரு முழு நாள் பயிற்சி.
இன்று காலை சிங்கப்பூர் Marina Bay Cruise Centerக்கு (மரீனா பே MRTக்கு அருகில் உள்ளது) சிஷ்யர்களுடன் வந்து சேர்ந்த நித்தி சுவாமிகள், சிஷ்ய, சிஷ்யைகளுக்கு ‘கல்பதரு’ காட்டுவதற்காக சொகுசுக் கப்பலில் ஏறினார். கப்பலின் பெயர், கொஸ்டா விக்டோரியா (Costa Victoria – மேலே போட்டோவில் உள்ள கப்பல்)

‘கல்பதரு’வில் கலந்துகொள்ள கட்டணமாக 125 சிங்கப்பூர் டாலர் அறவிடப்பட்டது.
என்ன இருந்தாலும், நித்தி, நித்திதான். அருணகிரிநாதர் மதுரை மடத்தில் பால் பிரசாதம் கொடுத்துக் கொண்டிருக்க, நித்தி ஜம்மென்று சிங்கப்பூர் சொகுசுக் கப்பலில், ‘கல்பதரு’ காட்டிக்கொண்டு இருக்கிறார்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக