ஞாயிறு, 23 டிசம்பர், 2012

தே.மு.தி.க., - எம்.எல்.ஏ.,க்கள், "ஐவருக்கு' தூண்டில்

சட்டசபையில் எதிர்கட்சி அந்தஸ்தை இழக்க வைக்கவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைந்து, ஒரு ராஜ்யசபா எம்.பி., "சீட்' பெறுவதை தடுக்கவும், தே.மு.தி.க., எம்.எல்.ஏ.,க்கள் சிலருக்கு, ஆளுங்கட்சி சார்பில் அடுத்த தூண்டில் வீசப்பட்டுள்ளது.இதில், ஐந்து பேர் சிக்கியுள்ளதால், விரைவில் அவர்கள், தங்கள் தொகுதிகளின் வளர்ச்சி பணிகளுக்காக, கோட்டையில், முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க உள்ளதாக ஆளுங்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.ராஜ்யசபா எம்.பி., தேர்தல், அடுத்த ஆண்டு, மே மாதம் நடக்கவுள்ளது. தற்போதைய நிலவரப்படி, தே.மு.தி.க.,விற்கு, 25 எம்.எல்.ஏ.,க்களின் ஓட்டுகள் உள்ளன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு, 10 எம்.எல்.ஏ.,க்களின் ஓட்டுகள் உள்ளன. ஒரு ராஜ்யசபா எம்.பி., தேர்வுக்கு, 34 எம்.எல்.ஏ.,க்களின் ஓட்டுகள் தேவை. அந்த அடிப்படையில்,தே.மு.தி.க.,வை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆதரித்தால், ஒரு எம்.பி., பதவி கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.இந்த வாய்ப்பு, தே.மு.தி.க.,வுக்கு கிடைக்கக் கூடாது என்பதற்காக, ஆளுங்கட்சி தீவிரமாக களமிறங்கியுள்ளது. தே.மு.தி.க.,வின் ராஜ்யசபா எம்.பி., கனவை தகர்க்கும் வகையில், தே.மு.தி.க., - எம்.எல். ஏ.,க்கள் சிலருக்கு தூண்டில் வீசப்பட்டுள்ளது.அதில் ஐந்து எம்.எல்.ஏ.,க்கள் சிக்கியுள்ளதாகவும், கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. http://www.dinamalar.com/


தே.மு.தி.க.,விலிந்து, ஐந்து எம்.எல்.ஏ.,க்கள், தங்களது தொகுதி வளர்ச்சி பணிகளுக்காக, முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகிஉள்ளது.அப்போது, தே.மு. தி.க.,வுக்கு, 20 எம்.எல். ஏ.,க்களின் ஓட்டுகள் மட்டுமே கிடைக்க வாய்ப்புள்ளது. ராஜ்யசபா எம்.பி., தேர்தலின்போது, கட்சி கொறடா உத்தரவுப்படி, ஓட்டளிக்க வேண்டும் என்றாலும், ஓட்டுப்பதிவு முறை, ரகசியமாக நடப்பதால், எம்.எல்.ஏ.,க்கள் யாருக்கு ஓட்டளித்தார்கள் என்பதை கண்டறிய முடியாது.

எனவே, மேலும் ஐந்து தே.மு.தி.க., - எம்.எல். ஏ.,க்களை இழுப்பதன் மூலம், ராஜ்யசபா எம்.பி., தேர்தலில், தே.மு.தி. க.,விற்கு இடமில்லாத நிலையை ஏற்படுத்த ஆளுங்கட்சி திட்டமிட்டுஉள்ளது.ஏற்கனவே, ஆளுங்கட்சிக்கு ஆதரவாக களமிறங்கிய நான்கு எம்.எல்.ஏ.,க்க ளுக்கு, கிடைத்துள்ள வரவேற்பு, இதர தே.மு.தி.க., - எம்.எல். ஏ.,க்களுக்கிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்திஉள்ளது.மேலும், தொடரும் அவதூறு வழக்குகளால், மிரண்டு போயுள்ள எம்.எல்.ஏ.,க்கள், ஆளுங்கட்சியிடம் சரண்டராவதே, தப்பிப்பதற்கு வழி என்ற எண்ணம் ஏற்பட்டுஉள்ளது. இதை, சாதகமாக பயன்படுத்தி, அவர்களை வளைக்கும் முயற்சிகள் தீவிரமாகியுள்ளது என்கிறது ஆளுங்கட்சி வட்டாரம்.

- நமது நிருபர் -

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக