சனி, 8 டிசம்பர், 2012

மதுரையில் முதல் சர்வதேச விமானம் துவங்கியது

மதுரை: கொழும்பில் இருந்து மதுரை வந்த, முதல் சர்வதேச விமானம், "மிகின் லங்கா' மதுரை விமான நிலையத்தில் இருந்து, இலங்கை தலைநகர் கொழும்புக்கு, நேற்று தனது பயணத்தை துவக்கியது. கொழும்பில் இருந்து, மதியம், 2:15 மணிக்கு புறப்பட்டு, மாலை, 3:00 மணிக்கு மதுரையை அடைந்தது. மொத்தம், 212 பேர் பயணிக்கக் கூடிய விமானத்தில், 108 பேர், மாலை, 4:15 மணிக்கு, மதுரையிலிருந்து புறப்பட்டு, கொழும்பு சென்றனர். திங்கள், புதன், வெள்ளியில், மதுரை - கொழும்பு சேவை உள்ளது; விரைவில் சரக்கு சேவையும் துவங்கப்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக