புதுடில்லி : நேரடி மானிய திட்டத்தை, ஜனவரி, 1ம் தேதி முதல்
அமல்படுத்துவதற்குரிய ஆயத்த பணிகளை, போர்க் கால அடிப்படையில் துவக்கும்படி,
அனைத்து அமைச்சகங்களையும்,பிரதமர் அலுவலகம் கேட்டு கொண்டு உள்ளது.
சுரண்டல்
பொது
வினியோக திட்டம், முதியோர் ஓய்வூதிய பலன், கிராமப்புற வேலைவாய்ப்பு
உத்தரவாத திட்டம் போன்ற பல திட்டங்களுக்காக, மத்திய அரசு, நிதியுதவி
மற்றும் மானியம் வழங்குகிறது.ந்த பலன்கள், நேரடியாக பயனாளி களைச்
சென்றடையாமல், மூன்றாம் நபர் வழியாக செல்வதால், சுரண்டல், ஏமாற்றுதல், ஊழல்
போன்றவை ஏற்படுகின்றன.இந்த குறைபாடுகளைப் போக்க, "ஆதார்' தேசிய அடையாள
அட்டை மூலம், பயனாளிகளின் வங்கி கணக்குக்கு, பணப் பலன்கள் நேரடியாக
சென்றடைய வழிவகை செய்யப்பட்டுள்ளது.இந்த, நேரடி மானிய திட்டம், அடுத்தாண்டு
ஜனவரி, 1ம் தேதி முதல், 43 மாவட்டங்களில் அமல்படுத்த, முடிவு
செய்யப்பட்டுள்ளது. முன்பு உள்ளாட்சி பதவிக்கு போட்டிபோட ஆட்கள் கிடைக்காது ... இப்போ உள்ளாட்சி தேர்தலில் ஜெயிக்க பல கோடி ரூபாய் செலவிடுகின்றனர்.... இது எல்லாமே மத்திய அரசின் , 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம், ரேசன் பொருட்கள் இவைகளால் வரும் கொள்ளை பணம்தான்... மக்களுக்கு போகாமல் நடுவில் இவர்கள் அடிக்கும் கொள்ளை அதிகம்... இப்படி நேரடியாக் பயனாளிகளின் பேங்க் அக்கவுண்ட் கு போவதால் இந்த இடைத்தரகர்கள் ஒழிவார்கள்...மக்கள் பணம் கொள்ளை போகாமல் இருக்கும்....http://www.dinamalar.com
குஜராத், இமாச்சல பிரதேசத்தில் நடக்கும் தேர்தலை காரணம் காட்டி, இந்த மாநிலங் களில், இத்திட்டத்தை அமல்படுத்த, தேர்தல் ஆணையம் தடை விதித்தது.இதன் காரணமாக, 51 மாவட்டங்களில் அமலாவது, 43 மாவட்டங்களானது குறிப்பிடத்தக்கது.எதிர்க்கட்சிகள், தொடர்ந்து குடைச்சல் கொடுத்து வருவதால், எப்படியாவது இத்திட்டத்தை அமல்படுத்தி, இதனால், கிடைக்கும் நன்மைகளை வெளிச்சம் போட்டு காட்ட வேண்டும் என்பதில், அரசு ஆர்வம் காட்டுகிறது.மத்திய அரசின் உதவியுடன் நடக்கும் திட்டங்களில், நேரடியாக பயன் அடைய கூடியதிட்டங்கள் என, மொத்தம், 34 திட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. திட்டம் அமல்படுத்தவுள்ள மாவட்டங்களின் கலெக்டர்களை அழைத்து, ஒரு நாள் கூட்டம் நடத்த வேண்டும் என, திட்ட கமிஷன் கூறியிருந்தது.
இதையடுத்து, அடுத்த வாரம், கலெக்டர்களின் ஆலோசனை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கூட்டத்திற்கு வருவது பற்றி, கலெக்டர்கள் உறுதிபட தெரிவிக்க வேண்டும். அதற்கு தகுந்தாற்போல், ஆலோசனை கூட்டத்தை நடத்துவதற்கான ஏற்பாடுகளை, திட்ட கமிஷன் செய்து வருகிறது.இதற்கிடையில், பிரதமர் அலுவலகம், அனைத்து அமைச்சகங்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.
அதில், கூறியிருப்பதாவது:
*நேரடி மானிய திட்டத்தை, அமல்படுத்துவதற்கு முன், அது தொடர்பான ஆயத்த பணிகளை போர்கால அடிப்படையில் துவக்க வேண்டும்.
*இத்திட்டத்தை அமல்படுத்தவுள்ள மாவட்டங்களில், ஆதார் அட்டைவைத்துள்ளவர்கள் பதிவு செய்து கொள்வதற்கான முகாம்களை நடத்த வேண்டும்.
*இத்திட்டத்தால், பயன் அடைய இருக்கும் அனைத்து பயனாளிகளும், பதிவு செய்து கொள்வதற்கான ஆரம்ப கட்ட பணியை அனைத்து அமைச்சகங்களும் முடுக்கிவிட வேண்டும்.
*பயனாளிகள் ஆதார் அட்டையுடன், வங்கி கணக்கு போன்ற விபரங்களை மின்னணுவில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
*மேற்கண்ட அனைத்து விஷயங்கள் அனைத்தையும், விழிப்புணர்வு பிரசாரத்தையும் போர்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும். இதற்கு, சிறப்பு முகாம் நடத்துவதே சிறந்ததாக இருக்கும்.
இவ்வாறு, பிரதமர் அலுவலகம் அனுப்பிய செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
20ம் தேதி :
குஜராத், இமாச்சல பிரதேசத்தில் தேர்தல் முடிவு, 20ம் தேதி வெளியாகிறது. இதன்பின் , இந்த மாநிலங்களை சேர்ந்த, எட்டு மாவட்டங்களில் பணிகளை துவக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.திட்டம் அமலாகும், 43 மாவட்டங்களில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து, தலைமை செயலர்கள், நிதிச் செயலர்களுடன், "வீடியோ கான்பரன்ஸ்' முறையில் ஆலோசனை நடத்த, திட்ட கமிஷன் முடிவு செய்து உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக