சனி, 15 டிசம்பர், 2012

2G 2ம் கட்ட ஏலத்தில் ரூ.20 ஆயிரம் கோடி எதிர்பார்ப்பு

புதுடில்லி :"இரண்டாம் கட்டமாக நடைபெறும், ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் , 20 ஆயிரம் கோடி ரூபாய் கிடைக்கும்' என, மத்திய அரசு எதிர்பார்க்கிறது.
ஸ்பெக்ட்ரம் அலைவரிசையை ஒதுக்கீடு செய்வது தொடர்பாக, சமீபத்தில் நடந்த ஏலத்தின் மூலம் மத்திய அரசுக்கு, 9,400 கோடி மட்டுமே வருவாய் கிடைத்தது. டில்லி, மும்பை, கர்நாடகா, ராஜஸ்தான், ஆகிய மண்டலங்களுக்கான, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடுக்கான அடிப்படை விலை, அதிகமாக இருந்தது. இதை காரணம் காட்டி, ஏலம் எடுக்க எந்த நிறுவனமும் முன்வரவில்லை.ஏலம் கோரப்படாத, அனைத்து ஸ்பெக்ட்ரம் அலைவரிசைக்கும், புதிதாக அடிப்படை விலை நிர்ணயிக்கப்பட்டு, நிதியாண்டின் இறுதிக்குக்குள், மறு ஏலம் விடப்படும் என, மத்திய தொலை தொடர்பு துறை அமைச்சர் கபில்சிபல் கூறியிருந்தார். இந்நிலையில், நேற்று முன் தினம் நடந்த, மத்திய அமைச்சரவை கூட்டத்தில், ஏலம் கோரப்படாத டில்லி, ராஜஸ்தான், மும்பை, கர்நாடக ஆகிய மண்டலங்களுக்கான, அடிப்படை விலையை, 30 சதவீதம் குறைக்க முடிவு செய்யப்பட்டது.dinamalar.com/

டில்லியில் நடைபெறும், தொலை தொடர்பு கருத்தரங்கில் பங்கேற்ற, தொலை தொடர்புத் துறையின் செயலர் சந்திரசேகர், நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:விடுபட்ட, ஏலம் கோரப்படாத மண்டலங்களுக்கான அடிப்படை விலையில், 30 சதவீதத்தை மத்திய அரசு குறைத்துள்ளது. இதையடுத்து, இந்த நிதியாண்டின் இறுதிக்குள் ஏலம் நடத்தி முடிக்கப்படும்.
மீண்டும் நடக்கும், இரண்டாம் கட்ட ஏலத்தின் மூலம், 20 ஆயிரம் கோடி ரூபாய் கிடைக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.ஏற்கனவே நடந்த ஏலத்தில் பங்கேற்ற நிறுவனங்கள் தான், இரண்டாவது ஏலத்தில் பங்கேற்பர் என, எதிர்பார்க்கப்படுகிறது.இவ்வாறு, அவர் கூறினார்.

கடந்த முறை நடந்த ஏலத்தில், டில்லி மண்டலத்திற்கு, 693 கோடி ரூபாயும்; மும்பைக்கு, 678 கோடி ரூபாயும்; கர்நாடகாவுக்கு, 330 கோடி ரூபாயும்; ராஜஸ்தானுக்கு, 67 கோடியும் நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. இந்த கட்டணத்தில் இருந்து, 30 சதவீதம் குறைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக