திங்கள், 24 டிசம்பர், 2012

கோவில் கருவறை நுழைவு போராட்டம் பெரியார் தி.க.வினர் 500 பேர் கைது

கோவில் கருவறை நுழைவு போராட்டம்: தந்தை பெரியார் தி.க.வினர் 500 பேர் கைது சென்னை, தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் கோவில் கருவறை நுழைவு போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலுக்கு ஊர்வலமாக செல்லப்போவதாகவும் அறிவித்திருந்தனர். இதையொட்டி இன்று காலை தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச் செலயாளர் கோவை ராம கிருஷ்ணன் தலைமையில் 500-க்கும் மேற்பட்டவர்கள் லஸ்கார்னர் அருகே உள்ள நாகேஸ்வரராவ் பார்க் அருகே திரண்டனர். தீண்டாமை ஒழிப்பு என்பதற்கு பதில் சாதி ஒழிப்பு என்று சட்டத்தை திருத்துமாறு கண்டன வாசகங்கள் அடங்கிய அட்டைகளை ஊர்வலத்தினர் ஏந்தி வந்திருந்தனர். அவர்கள் அனைவரும் அங்கிருந்து கபாலீசுவரர் கோவிலுக்கு ஊர்வலமாக செல்ல முயன்றனர். அப்போது அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இதில் 500-க்கும் மேற்பட்டவர்கள் கைதானார்கள். இதற்கிடையே இந்து அமைப்பினரும், பாரதீய ஜனதா கட்சியினரும் கபாலீசுவரர் கோவில் முன்பு திரண்டு நின்று தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினருக்கு எதிராக கோஷ மிட்டபடி நின்றிருந்தனர். இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை காணப்பட்டதால் ஏராளமான போலீசாரும் அங்கு குவிக்கப்பட்டிருந்தனர்.maalaimalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக