ஞாயிறு, 9 டிசம்பர், 2012

மார்ச் 31க்குள் அனைத்து பள்ளிகளிலும் முழு கழிவறை வசதிகள் வேண்டும்

 அட கொய்யால இன்னுமா கழிவறைகள் இல்லை கல்வி துறைதான்  பணப்புழக்கம் அதிகம் உள்ள துறையாச்சே ?
தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் வரும் மார்ச் 31ஆம் தேதிக்குள் கழிவறை வசதி இருக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அரசு பள்ளிகளில் கழிவறை வசதி மிக மோசமாக இருப்பதாகவும், அதை சீர்செய்ய வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் ஒரு தீர்ப்பில் தெரிவித்துள்ளது. மாணவ, மாணவிகளுக்கு தனித்தனியாக கழிவறை கட்ட வேண்டும் எனவும் உத்தரவிட்டது. இதுதொடர்பாக, மாநில தலைமை செயலர்களுக்கு மத்திய அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, தமிழக ஊரக வளர்ச்சித் துறை சார்பில் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகம் முழுவதும் உள்ள அங்கன்வாடி, தொடக்கப்பள்ளி, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள கழிவறை வசதிகள் குறித்து நூறு சதவீதம் அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆய்வு செய்ய வேண்டும். பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கழிவறைகளில் மேற்கூரை இடிந்து விழும் நிலையில் இருப்பவை, தண்ணீர் தொட்டி இல்லாதவை, தண்ணீர் வசதி இல்லாதவை குறித்து உடனடியாக கணக்கெடுத்து அரசுக்கு அறிக்கை அனுப்ப வேண்டும். மாணவ, மாணவிகளுக்கு தனித்தனியாக கழிவறை வசதி இருக்கிறதா எனவும் ஆய்வு செய்ய வேண்டும். இல்லாத பள்ளிகளில் உடனடியாக கழிவறை கட்டடங்கள் கட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். வரும் மார்ச் 31ஆம் தேதிக்குள் அனைத்து பள்ளிகளிலும் முழு கழிவறை வசதிகள் இருக்க வேண்டும். - இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப் பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக