வெள்ளி, 9 நவம்பர், 2012

U.S: மரிஜூவானா’ போதைப் பொருளை அனுமதிக்கலாம்?

வாஷிங்டன்: மருத்துவர்களின் அனுமதியின்றி மரிஜூவானா போதைப் பொருளை பயன்படுத்த அனுமதிக்கலாம் என்றும் அதை சட்டபூர்வமாக்கவேண்டும் என்றும் வாசிங்டன், கொலராடோ நாட்டை மக்கள் வாக்களித்துள்ளனர்.
நம்ம ஊர் கஞ்சா போல அமெரிக்காவில் மரிஜூவானா போதைப் பொருள் விற்பனை செய்யவும், பயன்படுத்தவும் தடை உள்ளது.
இதை மருத்துவர் அனுமதியில்லாமல் பயன்படுத்த முடியாது. கடைகளில் விற்கவும் கூடாது. 21 வயதுக்குட்பட்டோர் மரிஜூவானாவை பயன்படுத்தவும் தடை உள்ளது. அப்படிப் பயன்படுத்தினால் சட்டவிரோதமானது. இதை அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டும், பிற கோர்ட்டுகளும் உறுதிப்படுத்தியுள்ளன.
ஆனால் இதற்கு அமெரிக்க மக்களிடையே எதிர்ப்பு இருந்து வருகிறது. மருத்துவ ரீதியாக இதைப் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்.இதற்காக மருத்துவர் அனுமதி பெற வேண்டும் என்ற கட்டுப்பாட்டை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. http://tamil.oneindia.in/

இதனையடுத்து அனைத்து மாகாணங்களிலும் பொது வாக்கெடுப்புக்கு உத்தரவிடப்பட்டது. இந்த வாக்கெடுப்பில் மருத்துவர் அனுமதியில்லாமல், அவரது சீட்டு இல்லாமல் இதைப் பயன்படுத்தலாம், அதை சட்டப்பூர்வமாக்கலாம் என்று கொலராடோ மற்றும் வாஷிங்டனில் பெரும்பான்மையினோர் வாக்களித்துள்ளனர்.
இதேபோல மாசசூசட்ஸ் மாகாண மக்களும் மரிஜூவானா விற்பனையை சட்டப்பூர்வமாக்கலாம் என்று வாக்களித்து ஆதரவு தெரிவித்துள்ளனர்.
அதேசமயம், ஓரிகான் மற்றும் ஆர்கன்சாஸ் மாகாணங்களில் மரிஜூவானாவாவை சட்டப்பூர்வமாக்கத் தேவையில்லை என்று மக்கள் வாக்களித்துள்ளனர். விரைவில் மான்டனோ மாகாணம் வாக்களிக்கவுள்ளனர்.
அமெரிக்காவில் 17 மாகாணங்களும் கொலம்பியா மாவட்டமும் மருத்துவ ரீதியாக மரிஜூவானாவை பயன்படுத்த வகை செய்யும் சட்டங்களை வைத்துள்ளன.இதுவரை 6 மாகாணங்கள் மரிஜூவானா விற்பனை தொடர்பான நடவடிக்கைகளை தொடங்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக