வெள்ளி, 9 நவம்பர், 2012

ஊர் மக்கள் சேர்ந்து நடிக்கும் நேசம் நெசப்படுதே


  ஹீரோ, ஹீரோயின் தொடாமல் நடிக்கும் காதல் படம் ‘நேசம் நெசப்படுதே என்ற பெயரில் உருவாகிறது. இது பற்றி இயக்குனர் ராஜ சூரியன்  கூறியதாவது: மணப்பாறை மாவட்டம் பொன் முச்சந்தியில் ஸ்ரீ விஷ்ணு துர்கா கோயில் கட்டி உள்ளேன். இதை மையமாக வைத்து இக்கதை உருவாகி  இருக்கிறது. காதல்தான் உடலையும், உள்ளத்தையும் தூய்மையாக வைக்கிறது என்ற கருவும் இதில் இடம்பெறுகிறது.
வேந்தன் ஹீரோ. அரசி ஹீரோயின். இருவரும் புதுமுகம். எந்த காட்சியிலும் இருவரும் தொட்டுக்கொள்ளாமல் நடித்திருக்கின்றனர். மூன்று பரிமாணங்களில்  கதை சொல்லப்படுகிறது.
பறவை முனியம்மா, நாகு, வி.எஸ்.ராகவன் மற்றும் மணப்பாறை பகுதியை சேர்ந்தவர்களும் நடிக்கின்றனர். சாய் சிவன் ஒளிப்பதிவு.விஜய் மந்தாரா இசை. நானே இணை இசை, தயாரிப்பு, பாடல், கதை, திரைக்கதை பொறுப்பும் ஏற்றிருக்கிறேன். http://www.tamilmurasu.org/Tamil_News.asp?id=7

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக