திங்கள், 5 நவம்பர், 2012

கபாலி கோயில் வாசலில் பிச்சை எடுத்த நடிகை

‘கோயில் வாசலில் அமர்ந்து பிச்சை எடுத்தபோது மற்ற பிச்சைக்காரர்கள் என்னை விரட்டினர்’ என்றார் நடிகை விஜி. நடிகை சரிதா தங்கை விஜி, ‘ஆரோகணம்’ படத்தில் பிரதான வேடத்தில் நடித்தார். அதுபற்றி அவர் கூறியதாவது: நிறைய படங்களில் நடிக்க வாய்ப்பு வருகிறது. வெறும் அம்மா, அண்ணி வேடம் என்று சொன்னால் மறுத்துவிடுகிறேன். ‘ஆரோகணம்’ படத்தில் பைபோலார் டிஸ்ஸார்டர் என்ற மனநோயால் பாதித்தவராக நடித்திருந்தேன். லட்சுமி இயக்கினார்.
குடும்ப பிரச்னையில் கோபித்துக்கொண்டு பிச்சைக்காரர்களுடன் அமர்ந்து பிச்சை எடுப்பது போன்ற காட்சி எடுக்க வேண்டி இருந்தது. இதை என்னிடம் தயங்கி தயங்கி சொன்னார் இயக்குனர். நான் கவலைப்படவில்லை. கபாலீஸ்வரர் கோயில் வாசலில் நிஜ பிச்சைக்காரர்கள் மத்தியில் கிழிந்த ஜாக்கெட், சேலையுடன் போய் உட்கார்ந்துவிட்டேன். என்னை பிச்சைக்காரி என்று நினைத்து அருகிலிருந்து வயதான பெண், ‘எங்கிருந்த வர்றே’னு கேட்டார். ‘பக்கத்துலயிருந்து வாரேன்’ என்றேன். ‘எங்களுக்கே ஒண்ணும் கெடக்கல.. இதுல நீ வேறயா’ என்று விரட்டினார். நான் போக மறுத்தேன். அப்போது பிச்சை இட வந்தவர்கள் என் தட்டிலும் காசு போட்டுவிட்டு சென்றனர். துணை நடிகர்கள் பிச்சைக்காரர்கள் வேடத்தில் வந்தபோது அவர்களையும் விரட்டிவிட்டார்கள். கேமரா மறைத்து வைக்கப்பட்டிருந்ததால் ஷூட்டிங் நடக்கிறது என்று யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள பாத்திரங்கள் வந்தால் தொடர்ந்து நடிப்பேன். இவ்வாறு விஜி கூறினார்.http://www.tamilmurasu.org

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக