வெள்ளி, 16 நவம்பர், 2012

ராமதாசுக்கு ஒரு வேண்டுகோள்! திருமாவளவன் பேட்டி! தருமபுரி கலவரத்துக்கு தமிழக அரசே பொறுப்பு!


கடந்த 07.11.2012 அன்று கலப்பு திருமணம் காரணமாக, தர்மபுரி மாவட்டம் நாயக்கன் கொட்டாய் கிராமத்தில் நடந்த கலவரத்தில் 268 வீடுகள் மற்றும் 50க்கும் மேற்பட்ட வாகனங்கள் கொளுத்தப்பட்டன.
இந்த சம்பவம் தொடர்பாக சென்னையில் இன்று (16.11.2012) செய்தியாளர்களிடம் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன்,
தர்மபுரி அருகே தலித் மக்களின் குடிசைகளுக்கு தீ வைத்த சம்பவத்தில் அனைத்து கட்சிகளும் ஈடுபட்டுள்ளது. இதில் பாமக முன்னிலை வகித்துள்ளது. http://www.nakkheeran.in/
தமிழக அரசு கண்துடைப்பிற்காக சிலரை கைது செய்துள்ளது. ,இந்த சம்பவத்தை தடுக்க காவல்துறையோ, வருவாய் துறையோ எந்த நடவடிக்கையும் எடுக்காதது வியப்பாக இருக்கிறது. இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். தமிழக காவல்துறையோ, சிபிசிஐடியோ இந்த வழக்கை நடத்தினால் எந்த ஒரு நியாயமும் கிடைக்கப்போவதில்லை. ஆகவே, இந்த தர்மபுரி கலவர வழக்கை உடனடியாக சிபிஐக்கு மாற்ற வேண்டும். தர்மபுரி அருகே தலித்துக்களுக்கு எதிரே நடந்த வன்முறைகளுக்கு பாமகவும், அதன் துணை அமைப்பான வன்னியர் சங்கமும் முதண்மையான காரணங்களாக செயல்பட்டுள்ளன. அனைத்து கட்சி சாதியவாதிகளையும் இவர்கள் ஒருங்கிணைத்து இந்த வன்முறையை திட்டமிட்டு நடத்தியிருக்கிறார்கள். 6 மணி நேரம் நடந்த இந்த வன்முறை சம்பவத்தை காவல்துறை கைகட்டி வேடிக்கை பார்த்துள்ளது. ஆகவே இதற்கு தமிழக அரசே முழு பொறுப்பேற்க வேண்டும். பாமகவுக்கு ஒரு வேண்டுகோள். பாமகவும் விடுதலைச் சிறுத்தைகளும் இணைந்து இலங்கை தமிழர் பிரச்சனைகளிலும், இங்கே உள்ள தமிழக மக்களின் பிரச்சனைகளுக்கும் எவ்வளவோ போராட்டம் நடத்திருக்கிறோம். சமூக வேறுபாடின்றி ஒன்றாக செயல்பட்டிருக்கிறோம். இப்போது தர்மபுரி அருகே நடந்துள்ள சம்பவம் இந்த ஒற்றுமையை சீர்குலைப்பதாக அமைந்துள்ளது. பாமக நிறுவனர் ஐயா ராமதாஸ் அவர்கள் சாதி ஆதிக்கவாதிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இனிவரும் காலங்களில் தமிழக மக்களுக்காக விடுதலை சிறுத்தைகள் பாமகவுடன் இணைந்து போராட தயாராக உள்ளது என்றார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக