வெள்ளி, 16 நவம்பர், 2012

ஜாதி மறுப்பு இணைதேடல் சென்னையில் 25- 11- 2012


முதன்முறையாக ஜாதி மறுப்பு இணைதேடல் சென்னையில் 2012 நவம்பர் 25ல் நடைபெறுகிறது.
ஜாதி மறுப்புத் திருமணம் செய்ய விரும்புபவர்களுக்கான இணைதேடல் நிகழ்ச்சியை 2012 நவம்பர் 25 ஆம் தேதி, சென்னை பெரியார் திடலில் பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையம் நடத்தவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் பெரும் அளவில் செய்யப்பட்டுவருகின்றன.
ஜாதி மறுப்புத் திருமணங்கள் தமிழகத்தில் பல ஆண்டுகளாக நடந்துவந்தாலும், அண்மைக்காலத்தில் இத்தகைய திருமணங்களுக்கு எதிராக ஜாதி அமைப்புகள் கருத்துத் தெரிவித்தும், பிரச்சினை செய்தும் வருகின்றன.
மற்றொருபுறம், ஜாதி மறுப்புத் திருமணம் செய்ய விரும்பும் பலருக்கும் அதற்கான சரியான இணையர் கிடைப்பதில்லை. எனவே ஜாதிமறுப்பு செய்ய விரும்புவோருக்காக முதன்முறையாக இணைதேடல் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்படுகிறது.
இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வெளிநாட்டில் வசிக்கும் தமிழர்களிடமிருந்தும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்நிகழ்ச்சியில் மத மறுப்புத் திருமணம் செய்ய விரும்புவோர், மாற்றுத் திறனாளிகள், மணமுறிவு பெற்றோர், துணையை இழந்தவர்கள் ஆகியோருக்கான சிறப்பு இணைதேடல் பிரிவுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இவைதவிர, இந்நிகழ்வில் மருத்துவ முகாமும், மணமக்களுக்கான மனநல ஆலோசனை முகாமும் நடைபெற உள்ளது.
ஜாதியற்ற சமத்துவ சமுதாயம் படைக்க இப்பணி ஒரு நல்ல ஏற்பாடு என்று பல தரப்பிலிருந்து நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
மேலும் விவரங்களுக்கு:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக