வெள்ளி, 23 நவம்பர், 2012

அதிமுக அரசு அலைகழித்ததே வீரபாண்டி ஆறுமுகம் உடல்நிலை மோசமடைந்ததற்கு காரணம்: கலைஞர் பேட்டி

கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த திமுக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் 23.11.2012 வெள்ளிக்கிழமை காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மறைந்த வீரபாண்டி ஆறுமுகம் உடலுக்கு அஞ்சலி செலுத்த திமுக தலைவர் கலைஞர், சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு சென்றார். அங்கு அவர் வீரபாண்டியார் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.வீரபாண்டி ஆறுமுகம் மறைவு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கலைஞர், மிகப்பெரிய தூணை திமுக இழந்துவிட்டது. குண்டர் சட்டத்தின் மூலம் அதிமுக அரசு வீரபாண்டி ஆறுமுகத்தை அலைகழித்ததே அவரது உடல்நிலை மோசமடைந்ததற்கு காரணம் என்றார்.

குண்டர் சட்டத்தில் வீரபாண்டி ஆறுமுகம் கைதாகி, கடந்த மாதம் வேலூர் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக