வியாழன், 8 நவம்பர், 2012

பிரசவத்தின்போது நடிக்கவில்லை : சுவேதா மேனன்

நான் அவன் இல்லை, ‘அரவான் படங்களில் நடித்திருப்பவர் சுவேதா மேனன். இவர் ஸ்ரீவல்சன் மேனன் என்பவரை மணந்தார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்தபோது ‘களிமண்ணு என்ற மலையாள படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். பிரசவத்தின்போது அவருக்கு குழந்தை பிறந்ததை இயக்குனர் பிளெஸ்சி படமாக்கினார். இது பரபரப்பை ஏற்படுத்தியது. இது பற்றி சுவேதா மேனன் கூறியதாவது: நிஜ பிரசவத்தின்போது நடிக்கவில்லை. பிரசவ வலி என்பது பெண்களுக்குத்தான் புரியும். அந்த நேரத்தில் நடிப்பு வராது. தத்ரூபமாகவே பிரசவ காட்சி படமாக்கப்பட்டது. யாரெல்லாம் பிரசவ அறையில் இருந்தார்கள் என்பது எனக்கு தெரியாது. ஆனால் கண்டிப்பாக எனது கணவர் உடனிருக்க வேண்டும் என்று கூறி இருந்தேன். ஒரு குழந்தைக்கும், தாய்க்கும் உள்ள உறவை இப்படம் கூறுகிறது. குழந்தையை கவனமாக பார்த்துக்கொள்வதற்கு நேரம் எவ்வளவு முக்கியம் என்பதை உணர்ந்திருக்கிறேன்.
இந்த வாழ்க்கையை நானும் கணவரும் புரிந்துகொண்டிருக்கிறோம். ஒவ்வொரு முறை நான் குழந்தையை தூக்கும்போதும் முன்பு எப்படி இருந்தது, இப்போது எப்படி இருக்கிறது என்று அவர் கேட்டுக்கொண்டே இருப்பார். குழந்தை பிறந்து ஒன்றரை மாதமே ஆவதால் மும்பையிலேயே தங்கி இருக்கிறேன். சபீனா என்று குழந்தைக்கு பெயர் வைத்திருக்கிறோம். சபீனா என்றால் அழகு என்று அர்த்தம்.இவ்வாறு சுவேதா மேனன் கூறினா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக