வியாழன், 8 நவம்பர், 2012

அதிமுக இளைஞர்களுக்கு வேலை வழங்கவே சிறப்பு காவல் இளைஞர் படை


தமிழகத்தில் சிறப்பு காவல் இளைஞர் படை அமைப்பது தவறானது: கலைஞர் கருத்து தி.மு.க. தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கையில் கூறியிருப்பதாவது:-கேள்வி :- காவல் துறைக்குத் துணையாக சிறப்புக் காவல் இளைஞர் படை ஒன்றை அமைக்கப் போவதாக முதலமைச்சர் அறிவித்திருக்கிறாரே? பதில்:- காவல் துறையில் பணியாற்றுவோரின் எண்ணிக்கை போதவில்லை என்றால் ஏற்கனவே பல ஆண்டுக் காலமாக நடைமுறையில் உள்ள தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலமாக பணியமர்த்தி, அவர்களின் எண்ணிக்கையை உயர்த்திக் கொள்ள வேண்டியதுதானே? அரசுக்குப் புதிதாக இதுபோல் அதிகம் பேரை தேர்ந்தெடுப்பதென்றால் அதற்குரிய பணி நியமன விதிமுறைகளையும், ஊதிய அடிப்படைகளையும்தானே பின்பற்ற வேண்டும்.காவல் துறை கண்காணிப்பாளரே இவர்களை தேர்ந்தெடுப்பார் என்றால், அங்கன்வாடிப் பணியாளர்களுக்கும், சத்துணவுப் பணியாளர்களுக்கும் நேர்ந்த கதியைப்போல, அந்தந்த மாவட்டங்களில் உள்ள அ.தி.மு.க.வினர் பரிந்துரைகளைத்தானே ஏற்க வேண்டிய நிலை ஏற்படும்;கட்சிக்காரர்களுக்குப் பணிகள் வழங்க வேண்டும், அவர்களை காவல் துறையிலே நுழைக்க வேண்டும், முறைப்படி அவர்களை சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக தேர்ந்தெடுத்தால், தாங்கள் நினைத்தவர்களையெல்லாம் பணியிலே சேர்க்க முடியாது என்பதற்காக இந்த முயற்சி செய்யப்பட்டுள்ளதா?<அ.தி.மு.க. ஆட்சியின் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ள மற்றொரு தவறான திட்டம்தான் இது. ஏற்கனவே பணியிலே உள்ள 13 ஆயிரம் மக்கள் நலப் பணியாளர்களை பணியிலிருந்து நீக்கி தெருவிலே நிறுத்து வார்களாம்! ஆனால்; காவல் துறையில் 50 ஆயிரம் பேரை புதிதாக வேலையிலே அமர்த்தப் போகிறார்களாம்!<இவ்வாறு கலைஞர் கூறியுள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக