வெள்ளி, 16 நவம்பர், 2012

திருமாவளவன் ஆர்ப்பாட்டம்: சென்னை, தருமபுரி, கடலூரில்

சிதம்பரத்தில் (15.11.2012) விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

தென், வட மாவட்டங்களிலும், தமிழகம் முழுவதிலும் ஜாதி வெறியாட்டங்கள், சமூக விரோத செயல்கள் அதிகளவு நடந்து
வருகின்றன. தலித் மற்றும் தலித் அல்லாதவர்களிடையே மோதலை ஏற்படுத்த சில அரசியல் கட்சிகளும், சில அமைப்புகளும் செயல்பட்டு வருகின்றன. காதல் திருமணம், கலப்புத் திருமணம் செய்வது கூடாது என சில அரசியல் கட்சிகள் மேடையில் பேசி வருகின்றன. < தருமபுரியில் பட்டப்பகலில் தலித் மக்களின் குடிசைகள் எரிக்கப்பட்டுள்ளன. 6 மணி நேரம் இச்சம்பவம் நடந்துள்ளது. இதைக் கண்டித்து நவம்பர் 19-ம் தேதி எனது தலைமையில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. தருமபுரியில் நவம்பர் 21-ம் தேதியும், கடலூரில் 23-ம் தேதியும் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது என தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக