வெள்ளி, 16 நவம்பர், 2012

ராகுல்காந்தி தலைமையில் மக்களவைத் தேர்தலை காங்கிரஸ் எதிர்கொள்ளும்

 Rahul Lead 2014 Campaign டெல்லி: மக்களவைத் தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக அக்கட்சியின் பொதுச்செயலாளர் ராகுல் காந்தி நியமிக்கப்பட்டிருக்கிறார்.
காங்கிரஸ் கட்சியில் ராகுல்காந்திக்கு கூடுதல் பொறுப்புகள் வழங்கப்படக் கூடும் என்று கூறப்பட்டு வந்த நிலையில் மக்களவைத் தேர்தலை ராகுல்காந்தி தலைமையில் காங்கிரஸ் எதிர்கொள்ள முடிவு செய்திருக்கிறது.
ஜெய்ராம் ரமேஷ்-திக்விஜய் உதவி...
காங்கிரஸ் கட்சியின் தேர்தல் ஒருங்கிணைப்புக் குழுவுக்கு பொதுச்செயலராக இருக்கும் ராகுல் காந்தி தலைமையேற்கிறார். அக் குழுவில் அகமது பட்டேல், ஜனார்தன் திரிவேதி, திக்விஜய் சிங், மதுசூதன் மிஸ்த்ரி, ஜெய்ராம் ரமேஷ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். http://tamil.oneindia.in/  இனி என்ன இரண்டாவது அணி மூன்றாவது அணிகெல்லாம் கொண்டாட்டம் தான்
 அடுத்த தேர்தலில் காங்கிரசின் மூத்த இளைய தலைவர்கள் பலருக்கும் நல்ல ஒய்வு கிடைக்கும் சாமி 

கூட்டணி அமைக்க ஏ.கே.ஆண்டனி:
தேர்தலுக்கு முன் கூட்டணி தொடர்பாக முடிவு எடுக்க அமைக்கப்பட்டுள்ள துணைக்குழுவும் இதில் அடங்கும். இதற்கு கட்சியின் மூத்த தலைவரும் பாதுகாப்பு அமைச்சருமான ஏ.கே. அந்தோனி தலைமை வகிக்கிறார்.
அந்தோனி தலைமையிலேயே தேர்தல் அறிக்கை,அரசின் திட்டங்கள் தொடர்பான துணைக்குழுவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 3 வது துணைக்குழுவானது திக்விஜய் சிங் தலைமையில் தகவல் தொடர்பு மற்றும் பிரசாரம் ஆகியவற்றை கவனித்துக் கொள்ளும்.
கூட்டணி தொடர்பான துணைக் குழுவில் வீரப்ப மொய்லி, முகுல் வாஸ்னிக், சுரேஷ் பச்செளரி, ஜிதேந்திர சிங், மோகன் பிரகாஷ் ஆகியோர் உறுப்பினர்களாக இடம்பெற்றுள்ளனர்.
தேர்தல் அறிக்கைக்கு ப.சிதம்பரம்:
தேர்தல் அறிக்கை தயாரிப்பு மற்றும் அரசு திட்டங்கள் தொடர்பாக ஏ.கே.அந்தோனி தலைமையில் அமைக்கப்பட்டுள்ள துணைக்குழுவில் ப.சிதம்பரம், சுஷீல் குமார் ஷிண்டே, ஆனந்த் சர்மா, சல்மான் குர்ஷித், சந்தீப் தீட்சித், அஜீத் ஜோகி, ரேணுகா செளத்ரி பி.எல்.புனியா ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர்.
மோகன் கோபால் என்பவர் நிபுணராக சிறப்பு அழைப்பாளர் என்ற அந்தஸ்தில் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளார்.
திக்விஜய் சிங் தலைமையிலான தகவல் தொடர்பு, பிரசாரம் தொடர்பான துணைக் குழுவில் அம்பிகா சோனி, மணீஷ் திவாரி, ஜோதிர் ஆதித்ய சிந்தியா, ராஜீவ் சுக்லா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக