சனி, 3 நவம்பர், 2012

நடிகை லிசி தந்தை செலவுக்கு பணம் தர மறுப்பு

திருவனந்தபுரம் : கடந்த 1980ம் ஆண்டுகளில் மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் லிசி. இவர் மோகன்லால், மம்முட்டி உட்பட முன்னணி நடிகர்களுடன் ஏராளமான படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். இவரது தந்தை வர்க்கி. 15 ஆண்டுகளுக்கு முன் பிரபல டைரக்டர் பிரியதர்ஷனை லிசி காதலித்து மணந்தார்.

திருமணத்துக்கு பிறகு கணவருடன் சென்னைக்கு லிசி குடி பெயர்ந்தார். அதன் பிறகு, அவர் தந்தையை கவனிக்கவில்லை. செலவுக்கு பணமும் தரவில்லை. இதனால், 2 ஆண்டுகளுக்கு முன் மூவாற்றுபுழா நீதிமன்றத்தில் லிசி மீது வர்க்கி வழக்கு தொடர்ந்தார். இதில், வர்க்கியின் செலவுக்கு மாதம்  5,500 கொடுக்கும்படி லிசிக்கு உத்தரவிடப்பட்டது. ஆனால், லிசி பணம் கொடுக்கவில்லை. மேலும், இந்த தீர்ப்பை எதிர்த்து  கேரள உயர்நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அதில், மூவாற்றுபுழா நீதிமன்ற உத்தரவை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது.


அதன் பிறகும், தந்தைக்கு லிசி பணம் கொடுக்கவில்லை. மூவாற்றுபுழா நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய கோரி எர்ணாகுளம் கலெக்டரிடம் மனு கொடுத் தார். அதை ஏற்று, மூவாற்றுபுழா நீதிமன்றத்தின் உத்தரவை கலெக்டர் ரத்து செய்தார்.இதையடுத்து, கேரள உயர் நீதிமன்றத்தில் வர்க்கி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த நீதிபதி ரே, இது தொடர்பாக லிசியும், எர்ணாகுளம் மாவட்ட கலெக்டர் ஷேக்பரீதும் வரும் 12ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி சம்மன் அனுப்ப உத்தரவிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக