வியாழன், 15 நவம்பர், 2012

ஸ்டாலின் 'சிக்னலுக்கு' காத்திருக்கும் நாஞ்சில் சம்பத்

சென்னை: மதிமுகவுக்கு அதிகம் பாடுபட்டவன் நான்.. இந்த இயக்கத்தை விட்டு விலகவே மாட்டேன் என்று வைகோவுக்கு எதிராக சரவெடி வெடித்து வரும் நாஞ்சில் சம்பத் போட்டி மதிமுகவை உருவாக்குவார் என்றெல்லாம் கூறப்பட்டது. ஆனால் மற்றவர்களைப் போல அவர் திமுகவுக்கு தாவத்தான் போகிறார் என்றே கூறப்படுகிறது.
'தம்பி' நாஞ்சில் சம்பத்தை வரவேற்க திமுக தலைவர் கருணாநிதி தயாராகத்தான் இருக்கிறாராம். இதற்கான பேச்சுவார்த்தையின் போது, சம்பத் வரட்டும் என்று கூறியிருக்கிறார். ஆனால் அமெரிக்கா, இங்கிலாந்து போய்விட்டு திரும்பியிருக்கும் மு.க.ஸ்டாலின் இதுவரை எந்த சிக்னலும் கொடுக்கவில்லையாம்! நாஞ்சில் சம்பத்தும் கூட அவரை மகிழ்விக்கும் வகையில், மு.க.ஸ்டாலின் முதல்வராவதை வைகோ விரும்பவில்லை.. அதனாலேயே அதிமுக கூட்டணிக்குப் போவார் என்றெல்லாம் கூறி வருகிறார். http://tamil.oneindia.in/
  வைகோவை போலவே இவரது நாக்கிற்கும் நரம்பு இல்லை என்பது தெரிந்ததே கலைஞரை கேவலப்படுத்தி பேசிய நாராச வார்த்தைகள் எல்லாம் இனி வைகோவை கேவலப்படுத்த பயன்படும் அல்லது பழைய படி ஜெயாவை கேவலப்படுத்த பயன்படும் என்ன இதுவும் வைகோவும் ஒரே ஒரு தாய் பிராணிகள் 

ஆனாலும் மு.க.ஸ்டாலின் எந்த ஒரு சிக்னலும் கொடுக்கவில்லை. ஸ்டாலின் தரப்பிலிருந்து சிக்னல் வந்த உடனேயே நாஞ்சில் சம்பத்தின் வண்டி அறிவாலயத்தில் நிற்கும் என்கின்றனர் திமுக வட்டாரங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக