டெல்லி:
டெல்லியில் இருபிரிவு சீக்கியர்கள் கத்தியால் மாறி மாறி சராமரியாக
வெட்டிக் கொண்டதில் 8 பேர் படுகாயமடைந்தனர். இருவரது நிலைமை கவலைக்கிடமாக
இருக்கிறது.
டெல்லியில் சீக்கியர்களின் கோவிலான குருத்வாராவில்
சிரோமணி குருத்வாரா பிரபந்தக் கமிட்டி தேர்தல் குறித்து ஆலோசனைக் கூட்டம்
நடைபெற்றது. அப்போது சிராமணி அகாலி தளம் மற்றும் சர்னா என்ற
குழுவினருக்கிடையே உருவான வாக்குவாதம் மோதலாக வெடித்தது.
மோதலின்
போது சீக்கியர்கள் தாங்கள் வைத்திருந்த நீண்ட வாளால் ஒருவரையொருவர்
வெட்டினர். இதில் சிரோமணி அகாலி தளம் தலைவர் மஞ்சித்சிங் உள்ளிட்ட 8
பேருக்கு காயம் ஏற்பட்டது. இதில் இருவரது நிலைமை கவலைக்கிடமாக இருக்கிறது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக