ஞாயிறு, 18 நவம்பர், 2012

தமன்னா! தமிழ் ரசிகர்கள் என்னை இன்னும் மறக்கவில்லை

 தமன்னாவுக்கு தமிழ் சினிமாவில் ஒரு குடும்பமே எதிரியாக இருக்கிறது அது வேறு யாரும் இல்லை தற்போது கம்பராமாயணம் தமிழ் இலக்கியம் அறம் பொருள் இன்பம் மற்றும் தமிழ் பண்பாடு பற்றி எல்லாம் நீட்டி முழக்கிவரும் ஒரு ex கதாநாயகன் தான் ஆணாதிக்கம் என்றால் இதுதான் 
விஜய், சூர்யா, தனுஷ், கார்த்தி, ஜெயம் ரவி, ஜீவா என முன்னணி ஹீரோக்கள், இளைய தலைமுறை ஹீரோக்கள் ஆகியோர்களில் பெரும்பாலான ஹீரோக்களுடன் நடித்துவிட்டார் தமன்னா. பெரும்பாலான படங்கள் ஹிட் தான் என்றாலும் இன்று தமன்னாவிற்கு தமிழ்& திரையுலகில் வாய்ப்புகள் இல்லை. இந்தியிலும் தெலுங்கிலும் நல்ல வாய்ப்புகள் இருந்தலும் தமிழ்ப் படங்களில் நடிப்பது தான் தமன்னாவிற்கு முக்கியமாம். தமிழ்ப்படங்களில் வாய்ப்பு இல்லாமல் இருப்பதைப் பற்றி கேட்ட போது தமன்னா “ தமிழ்ப்படங்களில் வாய்ப்புகள் இல்லையென்றாலும் தமிழ் ரசிகர்கள் என்னை இன்னும் மறக்கவில்லை.  நான் சென்னைக்கு வந்தால் என் சொந்தஊரில் கால் வைப்பது போல் உணர்வேன்.தமிழ் சினிமாவிற்கு வரவேண்டிய தேவை இருக்காது என்ற அளவுக்கு நான் தமிழில் நடித்துவிடவில்லை. ஹீரோக்களில் ரஜினி, கமல் ஆகியவர்களுடன் ஒரு படத்திலாவது நடித்துவிட 
வேண்டும். மணிரத்னம், ஷங்கர் ஆகியோர் படங்களிலும் நடித்தால் தான் எனக்கு திருப்தியே” என மனம் திறந்திருக்கிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக