ஞாயிறு, 18 நவம்பர், 2012

மாற்றுத் திறனாளி கோயிலில் வழிபடத் தடையா? கி.வீரமணி கண்டனம்!

கோயிலில் வழிபடத் தடையா? கி.வீரமணி கண்டனம்!திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில்,இந்து அறநிலையப்  பாதுகாப்புத் துறையின் நோக்கம் - அது சட்டம் இயற்றிய நீதிக்கட்சி காலத்திலேயே தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. தணிக்கையே தவிர, இந்து மத பிரச்சாரம் செய்வதோ, பக்தியைப் பரப்புவதோ அல்ல.(அ) இந்திய அரசியல் சட்டத்தில் கூட, மத விஷயங்களில், உள் தத்துவங்கள், முதலியவற்றைத் தவிர, பல  வகையில் சீர்திருத்தம் செய்யவும் தெளிவாக இந்திய அரசியல் சட்ட அடிப்படை உரிமைகளில் பிரிவு 25இல் (ஹசவiஉடந) மதச் சார்பற்ற மற்ற விஷயங்களில் அரசுகள் தலையிட, மாற்றம் செய்ய உரிமை உள்ளது.

ஆ) இந்த உரிமைகளில்கூட எல்லை வகுக்கப்படாத முழு உரிமைகள் (ஹளேடிடரவந சiபாவள) அல்ல, பொது அமைதி, பொது ஒழுக்கம், சுகாதாரம், இவற்றோடு இந்திய அரசியல் சட்டத்தின் இந்தப் பிரிவின் மற்ற விதிகள் இவைகளுக்குட்பட்டதே அவ்வுரிமைகள்.>இந்த நிலையில், தமிழ்நாடு இந்து அறநிலையப் பாதுகாப்பு துறையின் சுற்றறிக்கை, ஆணை - மாற்றுத் திறனாளிகளாக உள்ள பக்தர்கள் ஊன்றுகோல், மற்றும் செயற்கைக்கால் மற்றும் செயற்கை உபகரணங்களில் தோல் சம்பந்தப்பட்ட பொருட்களினால் செய்யப்பட்டுள்ளது என்பதனால், கோயில்களில் வழிபட அத்தகைய மாற்றுத் திறனாளிகளை கோயில் “இறை சன்னதி வரை” சென்று வழிபடச் செய்ய வழி இல்லை என்பது போன்ற நிலை -
மனிதநேயத்திற்கும், மனித உரிமைக்கும் முற்றிலும் மாறுபட்டதாகும்.தமிழ்நாடு உடல் ஊனமுற்றோர் சங்கங்களின் கூட்டமைப்பு இதுபற்றி 6.9.2012-இல் இந்து அறநிலையப் பாதுகாப்புத் துறைக்கு இந்த நிலையை அனுமதிக்காததை நீக்க வேண்டும் என்று கோரியுள்ளது.இன்று கோயில் உள்ளே எண்ணெய் விளக்குக்குப் பதில் மின்சார விளக்குகளைப் போடுவதும், பெரிய கோயில்களில் ஏர்கண்டிஷன் உட்பட செய்துள்ளதும், பக்தர்களைக்கூட மெட்டல் டிடெக்டர் வைத்து சோதித்து அனுப்பும் முறையும், திருப்பதி லட்டு, பழனி கோயிலில் இழுவை ரயில் மூலம் கோயிலுக்கு அனுப்புவதும், ஆகம விதிகளில் உண்டா?<ஆண்டவன் சேவைக்கு அனுமதிக் கட்டணம் வசூலிக்க ஆகமங்கள் கூறுகின்றனவா?

எல்லா கோயில்களும் ஆகம விதிப்படி கட்டப்பட்டுள்ளனவா?<ஆகம விதிப்படி கட்டப்படாத கோயில்கள் அறநிலையப் பாதுகாப்பு துறையின்கீழ் இருக்கலாமா? இருக்கிறதே - அதற்கென்ன பதில்?<மாற்றுத் திறனாளிகளுக்கு, மற்ற மனிதர்களுக்கு உள்ள உரிமை மறுக்கப்படக் கூடாது என்ற நியதி அடிப்படையிலேயே நாம் இதனை சம்பந்தப்பட்ட துறைக்குத் தெரிவித்து கேட்கிறோம்.<;உடனடியாகப் பரிகாரம் கிடைக்காவிட்டால், மனித உரிமை ஆணையம், நீதிமன்றங்கள் மூலம் தீர்வு காணப்பட நேரிடலாம். அந்நிலைக்கு முன்பே பரீசிலித்து நீதி வழங்கிடுவது அவசியம், அவசரம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக