செவ்வாய், 27 நவம்பர், 2012

நடிகை புவனேஸ்வரி சென்னை அருகே தியேட்டரில் ஜோராக காட்டினார்

சென்னை அருகே டிரைவ் இன் தியேட்டருக்கு வந்த கவர்ச்சி நடிகை புவனேஸ்வரியும், அவரது ஆட்களும், தியேட்டருக்குள் புகுந்து, அடித்து நொறுக்கி ஒரு வழி பண்ணி விட்டனர் என்று வழக்கு செய்துள்ளது போலீஸ்.
நடிகை புவனேஸ்வரியின் ஆட்கள் போகிற போக்கில், போலீஸூக்கும் ‘நாலு சாத்து’ சாத்திவிட்டு போனதால், புவனேஸ்வரியைக் கைது செய்து உள்ளே தள்ள போலீஸார் தீவிரம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.
தீவிரவாதி தாக்கினாலாவது கௌரவமாக இருக்கும், தனிப்படை அமைத்து தேடலாம். இங்கே தாக்கியது புவனேஸ்வரியின் தனிப்படை அல்லவா? கடுப்பில் உள்ளது காவல்துறை.
நடிகை புவனேஸ்வரி, ஏற்கனவே போலீஸூக்கு பரிச்சயமானவர். சில காலத்துக்கு முன், விபச்சாரம் செய்ததாக கையும் களவுமாக பிடிபட்டவர். அந்த விவகாரம் விஸ்வரூபம் (கமல் மன்னிக்கவும்) எடுத்து, பத்திரிக்கையாளர்களுக்கும் திரையுலகினருக்கும் கூட பெரும் பிரச்சினை வெடித்தது.

இதுகுறித்து தென்னிந்திய நடிகர் சங்கத்தில் கூட்டம் போட்டு, ‘வயிற்றுப் பிழைப்புக்காகத்தானே இதுபோல செய்கிறார்கள்’ என்றெல்லாம் நடிகைகளுக்கு வக்காலத்து வாங்கிப் பேசினார்கள்.
அப்போது ‘வயிற்றுப் பிழைப்புக்காக செய்கிறார்’ என திரையுலக பிரமுகர்கள் சிலரால் கூறப்பட்ட நடிகை புவனேஸ்வரி, இப்போது, ஆச்சரியமான காரியம் ஒன்றை செய்தார்.
 ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள ஒரு டிரைவ் இன் ஹோட்டலுக்கு, தமது ஆட்களுடன் துப்பாக்கி படம் பார்க்க வந்தார். அப்போது தியேட்டர் வளாகத்திற்குள் நுழைய காரை ஓட்டி வந்த புவனேஸ்வரியின் டிரைவர், தனக்கு முன்னால் போய்க் கொண்டிருந்த கார் மீது இடித்து விட்டார். இதையடுத்து இரு தரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
தகராறு என்றால், புவனேஸ்வரிக்குப் பக்கத்தில் அவரது தளபதி போல உட்கார்ந்திருந்த நபர் வேகமாக வந்து முன்னால் சென்ற காரின் டிரைவரை அடித்து உதைத்தார். அவரை தனியே விடலாமா? புவனேஸ்வரியும் காரை விட்டு இறங்கி வந்து வாக்குவாதம் செய்தார். இதைப் பார்த்த தியேட்டர் ஊழியர் செல்வராஜ் என்பவர் அவர்களை சமாதானப்படுத்த முயன்றார். ஆனால் அவரையும போட்டு உதைத்தனர் புவனேஸ்வரியின் தனிப்படை.
இதையடுத்து போலீஸாருக்குத் தகவல் போனது. போலீஸார் விரைந்து வந்தனர்.
சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி, ஜீப் டிரைவர் பாஸ்கர் ஆகியோர் விரைந்து வந்து தகராறு செய்த நடிகை புவனேஸ்வரியையும், அவருடன் வந்தவரையும் கண்டித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது எங்கிருந்தோ ஒரு மர்மக் கும்பல் அங்கு வந்து இறங்கியது. அவர்கள் புவனேஸ்வரியின் ஆட்கள் என்று கூறப்படுகிறது. அவர்கள் போலீஸாரை தாக்கினர். தியேட்டருக்குள் புகுந்து தியேட்டரையும் அடித்து சூறையாடினர். அதன்பின் அங்கிருந்து ஓடிவிட்டனர். புவனேஸ்வரியும், அவருடன் படம் பார்க்க வந்த ஆட்களும் கூடவே ஓடிவிட்டனர்.
இப்போது நடிகை புவனேஸ்வரி, மற்றும் அவரது ஆட்கள் மீது கொலை முயற்சி, பணி செய்ய விடாமல் தடுத்தல் மற்றும் பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட 9 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர் போலீஸார். புவனேஸ்வரியை வீட்டில் காணவில்லை. போலீஸ் தேடுகிறது.
எதற்கும் கொஞ்சம் மைல்டாகவே தேடுங்க சார், தென்னிந்திய நடிகர் சங்கத்தில் கூட்டம் போட்டு விடுவார்கள்.
http://viruvirupu.com/2012/11/27/38368/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக