செவ்வாய், 27 நவம்பர், 2012

தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா செக் மோசடி

சென்னை: இயக்குநர் கஸ்தூரி ராஜா மீது சவுகார் பேட்டையை சேர்ந்தவர் முகுந்சந்த் போத்ரா என்பவர் செக் மோசடி வழக்கு பதிவு செய்துள்ளார். தன் மகன் தனுஷ் ரஜினி மகளை மணந்துள்ளதால், வாங்கிய கடனை திருப்பி செலுத்துவதில் பிரச்சினை இல்லை என்று கூறி இந்த கடனை வாங்கியுள்ளாராம் கஸ்தூரி ராஜா (!!)
திரைப்படத் துறையினருக்கு வட்டிக்கு கடன் கொடுத்து வருபவர் இந்த போத்ரா. இயக்குநர் கஸ்தூரி ராஜாவுக்கு இவர் கொடுத்த கடனை திரும்பி தரவில்லையாம்.

இதுகுறித்து முகந்த் சந்த் போத்ரா தாக்கல் செய்துள்ள மனுவில், "இயக்குனர் கஸ்தூரி ராஜா ஆர்.கே. புரொடக்ஷன்ஸ் என்ற பெயரில் சினிமா கம்பெனி நடத்துகிறார். படவேலைகளுக்காக என்னிடம் அவர் ரூ.65 லட்சம் கடன் பெற்றார். நடிகர் தனுஷ் தனது மகன் என்றும், ரஜினிகாந்த் மகளை அவர் திருமணம் செய்துள்ளார் என்றும், எனவே கடனை திருப்பித் தருவதில் பிரச்சினை இல்லை என்றும் உறுதி அளித்திருந்தார்.
ஆனால் வாங்கிய பணத்தை அவர் திருப்பித் தரவில்லை. பலமுறை வற்புறுத்திய பிறகு ரூ.40 லட்சத்துக்கும், ரூ.25 லட்சத்துக்கும் தனித்தனி செக்குகள் கொடுத்தார். வட்டிக்கும் இன்னொரு செக் வழங்கினார். ரூ.40லட்சம் செக்கை பாங்கில் செலுத்தினேன். அது பணம் இல்லை என்று திரும்பி வந்து விட்டது.
இதையடுத்து கஸ்தூரி ராஜா மீது போலீசில் செக் மோசடி புகார் அளித்தேன் அதன் மீது இதுவரை போலீசார் வழக்கு பதிவு செய்யவில்லை. எனவே போலீசாருக்கு கஸ்தூரி ராஜா மீது வழக்கு பதிவு செய்யும்படி கோர்ட்டு உத்தரவிட வேண்டும்," என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கு நீதிபதி ஆறுமுகசாமி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இதுகுறித்து போலீஸ் கமிஷனருக்கு நோட்டீஸ் அனுப்ப அவர் உத்தரவிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக