திங்கள், 26 நவம்பர், 2012

820 மில்லியன் ஹிட்!! கங்னம் ஸ்டைல்’ ராப் பாடல், youtube ப்பில் மெகா சாதனை!



தென் கொரிய ராப் பாடகர் சை (PSY) படைப்பில் உருவான கங்னம் ஸ்டைல் (Gangnam Style) பாடல் வீடியோ, யூடியூப்பில் இதுவரை அதிக தடவை பார்க்கப்பட்ட வீடியோ என்ற சாதனையை படைத்துள்ளது. கடந்த ஜூலையில் யூடியூப்பில் இணைக்கப்பட்ட கங்னம் ஸ்டைல் பாடல் வீடியோ, நேற்றைய (ஞாயிற்றுக்கிழமை) நிலவரப்படி 820 மில்லியன் ஹிட்டுகளைக் கடந்துவிட்டது.

இந்த பாடல் வீடியோ வெளியான உடனேயே, Gaon Chartல் முதலிடத்துக்கு சென்றது. தென்கொரிய தேசிய விற்பனைக்கான அளவுகோல் சார்ட் அது. அதன்பின் தற்போது, யூடியூப்பில் இதுவரை அதிக தடவை பார்க்கப்பட்ட வீடியோ என்ற சாதனையை படைத்துள்ளது.
பாடலின் தீம் மிகவும் சிம்பிளானது. ஒரு விதத்தில் சொன்னால், நையாண்டி பாடல் இது. வடகொரிய தலைநகர் சோல் (Seoul) அருகேயுள்ள கங்னம் மாவட்ட மக்களின் வாழ்க்கை முறையை கிண்டல் செய்கிறது பாடல். பொதுவாகவே தென் கொரியா முழுவதும் பரவலாக உள்ள neologism, இதில் கிணடலடிக்கப்படுகிறது.
இதற்கு முன்பு கனடாவின் பிரபல பாப் டீன் ஸ்டார் Justin Bieberன் ‘பேபி’ என்ற வீடியோதான் யூடியூப்பில் அதிகம் பார்க்கப்பட்ட வீடியோ என்ற சாதனையை படைத்திருந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக