சனி, 3 நவம்பர், 2012

கப்பலில் இருந்து 5-வது ஊழியர் உடல் கரை ஒதுங்கியது

 நாம் தமிழர்கள் பண்பை பற்றி மனிதாபிமானத்தை பற்றி எல்லாம்  உலகிற்கே பாடம் எடுத்தவர்கள் ஆனால் நமது வீட்டில் அல்லது நாட்டில் இதெல்லாம் கண்டுக்கவே மாட்டோம் சினிமா ஷூட்டிங் முக்கியமா இது முக்கியமா விபரம் இல்லாம பேசப்படாது 
சென்னை: நிலம் புயலின் போது சென்னை பட்டினப்பாக்கம் கடற்பரப்பில் கரை ஒதுங்கிய சரக்குக் கப்பலில் இருந்து குதித்தவர்களில் 5-வது ஊழியரின் உடலும் கரை ஒதுங்கியது.
தரை தட்டிய கப்பல்
மத்திய அமைச்சர் சரத்பவார் குடும்பத்தினரால் நிர்வகிக்கப்படும் நிறுவனத்துக்கு சொந்தமானது பிரதிபா காவிரி என்ற சரக்குக் கப்பல். இக்கப்பல் சென்னையில் சரக்கை இறக்கிவிட்டு மும்பை செல்ல முடியாமல் சென்னை கடற்பரப்பில் நின்று கொண்டிருந்தது. தங்களுக்கான எரிபொருள் மற்றும் உணவு வழங்க கப்பலில் இருந்த 37 பணியாளர்கள் பலமுறை துறைமுக, காவல்துறையினருக்கு கோரிக்கைவிடுத்தும் யாரும் கேட்பாரில்லை. ஏஜெண்டும் கண்டு கொள்ளவில்லை. இந்நிலையில் வங்கக் கடலை வலம்வந்த நிலம் புயல் இந்த சரக்குக் கப்பலையும் பதம் பார்த்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக