புதன், 10 அக்டோபர், 2012

மீண்டும் Yuvan Shankar and Selvaragavan

Yuvan Rejoin With Selva Again மீண்டும் யுவனுடன் கைகோர்க்கும் செல்வராகவன்!

இந்தத் தலைமுறை சினிமா ரசிகர்களை ரொம்பவே மயக்கிய இசையமைப்பாளர் - இயக்குநர் என்றால்... அது யுவன் சங்கர் ராஜா - செல்வராகவன் கூட்டணிதான்.
துள்ளுவதோ இளமையில் தொடங்கி, காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை ஆகிய படங்களின் இசை தமிழ் சினிமாவைக் கலக்கியது. இந்த படங்களின் பாடல்கள் அனைத்துமே இப்போதும் இளைஞர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
பின்னர் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர். ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன ஆகிய படங்களுக்கு ஜி.வி.பிரகாஷுடன் கைகோர்த்தார் செல்வா. இந்த இரு படங்களுமே பெரிதாக பேசப்படாமல் போயின.
அடுத்து இரண்டாம் உலகம் படத்தில் ஹாரிஸ் ஜெயராஜுடன் இணைந்துள்ளார் செல்வராகவன்.
இந்த நிலையில் தற்போது யுவனும் செல்வாவும் மீண்டும் இணைந்துள்ளனர்.
இரண்டாம் உலகம் படத்தினைத் தொடர்ந்து சிம்புவை வைத்து ஒரு படம் இயக்குகிறார் செல்வராகவன்.
இப்படத்திற்கு யுவன் இசையமைக்க சம்மதம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஏற்கெனவே தனது பேஸ்புக் பக்கத்தில் தகவல் வெளியிட்டிருந்தார் யுவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக