விஜய்
டிவியில் சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன்-3 கடந்த 2011-ம் ஆண்டு
தொடங்கப்பட்டது. இதற்காக தமிழ்நாடு முழுவதிலும் இருந்தும் போட்டியாளர்களை
தேர்வு செய்தனர். இறுதியில் 25 போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பல
சுற்றுகள் மூலம் இறுதிப்போட்டிக்கு 5 பேர் தகுதிப்பெற்றனர்.
தமிழகத்தின்
செல்லக்குரலுக்கான தேடல் சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன்-3 இறுதி போட்டி
நேற்று இரவு சென்னையில் நடைபெற்றது. இதில் ஒவ்வொரு போட்டியாளருக்கும்
இரண்டு வாய்ப்புகள் வழங்கப்பட்டது.
ஆஸ்கார் விருது
பெற்ற ஏ.ஆர். ரகுமான், மனோ, சித்ரா, மால்குடி சுபா மற்றும் பலர்
முன்னிலையில் போட்டியாளர்களான யாழினி, ஆஜித், சுகன்யா, பிரகதி, கௌதம்
ஆகியோர் தனது திறமைகளை வெளிப்படுத்தினர். எஸ்.எம்.எஸ். மூலம் முதல்
இடத்தைப் பிடிதவரை ஏ.ஆர். ரகுமான் அறிவித்தார்.
பேர்களில் ஆஜித்யை ஏ.ஆர். ரகுமான் வெற்றி பெற்றவராக அறிவித்தார். இவருக்கு
60 லட்சம் மதிப்புள்ள வீடு பரிசாக வழங்கப்பட்டது. இரண்டாவது பரிசு பெற்ற
பிரகதிக்கு 5 லட்சம் மதிப்புள்ள பரிசும், 3-வது பரிசுப்பெற்ற யாழினிக்கு 3
லட்சம் மதிப்புள்ள பரிசும், 4-வது பரிசுகள் பெற்ற சுகன்யா மற்றும்
கௌதமுக்கு 2 லட்சம் மதிப்புள்ள பரிசும் வழங்கப்பட்டது.
இந்த தெரிவு முறையானது பல குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகியுள்ளது தெரிந்ததே
இந்த தெரிவு முறையானது பல குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகியுள்ளது தெரிந்ததே
ஆஜித் சிறந்த பாடகர்.அது மட்டுமல்லாமல் சிறுவயதிலே அதிக திறமை உள்ளவர்.வாக்குகளின் அடிப்படையில் மட்டுமல்ல மதிப்பெண்ணிலும் அவரே முதலிடத்தில் உள்ளார்.ஆஜித்துக்கு பாராட்டுகள்.
பதிலளிநீக்கு