சனி, 27 அக்டோபர், 2012

பாடகி சின்மயி விவகாரத்தில் திருப்பம்! சின்மயி மீது போலீஸில் புகார்!!


இவர் மீதும் புகார்
ஏற்கனவே மீடியாவிலும், சமூக இணையதளங்களிலும் பரபரப்பாக அடிபட்டுக் கொண்டுள்ள பாடகி சின்மயி விவகாரத்தில், அடுத்த திருப்பம். பாடகி சின்மயி மீது, சென்னை காவல்துறை ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சமூகங்களுக்கு இடையே பகையுணர்வை ஏற்படுத்துகிறார் என்பது புகார்.
“என்னை ஆபாசமாக அர்ச்சனை செய்கிறார்கள்” என்று பாடகி சின்மயி முதலில் காவல்துறையின் கதவுகளை தட்டினார். இருவரை கைது செய்தது காவல்துறை. அதன்பின், சின்மயியால் குற்றம்சாட்டப்பட்ட எழுத்தாளர் லாஸ் ஏஞ்சல்ஸ் ராம், குற்றச்சாட்டுகளை மறுத்ததுடன், “புகாரை வாபஸ் வாங்காவிட்டால், சின்மயி மீது மானநஷ்ட வழக்கு போடுவேன்” என்றார்.
இப்போது, அம்பேத்கர் விழிப்புணர்வு பாசறைத் தலைவர் நீலமேகம் என்பவர், சின்மயி மீது புகார் கூறியுள்ளார். பாடகி சின்மயி சமூக வலைத்தளத்தில் தாழ்த்தப்பட்ட மீனவர் சமுதாயம் பற்றி அவதூறு கருத்து வெளியிட்டதாகவும், மேலும் இடஒதுக்கீடு தேவையில்லை என்று சின்மயி வலைத்தளத்தில் எழுதியுள்ளதாகவும் புகார் கூறப்பட்டுள்ளது. viruviruppu.com

“இப்படியான கருத்துக்களை எழுதி, சமூகங்களுக்கு இடையே பகையுணர்வை ஏற்படுத்தும் பாடகி சின்மயி மீது, நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என்கிறது அவரது புகார்.
இந்தப் புகார் தொடர்பாக விசாரணை நடத்த, மத்திய குற்றப்பிரிவு போலீசுக்கு சென்னை காவல்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக