செவ்வாய், 9 அக்டோபர், 2012

பரிதிமீது soft ? புகாருக்கு No Action

ஸ்டாலின் – பரிதி முறுகலால் ஆனந்தமாக டிலே ஆனதா போலீஸ் ஆக்ஷன்?

Viruvirupu
தி.மு.க.வுக்குள் தாமரை இலையும் தண்ணீரும்போல இருந்துவரும் முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி மீது ஒரு நில மோசடி வழக்கு பதிவு  செய்யப்பட்டுள்ளது.
மற்றைய தி.மு.க. வி.ஐ.பி.களுக்கு எதிராக மோசடி வழக்குகள் மழையாக கொட்டியபோது, மழையில் தூறல்கூட பரிதியில் பட்டதில்லை. அதற்கு காரணம், அவர் தி.மு.க.-வுக்குள் முறுகல் நிலையில் இருந்ததுதான் என்பதாகவும் ஒரு பேச்சு இருந்தது. (பரிதி முறுகியது, ஸ்டாலினுடன்)
காயா.. பழமா?
எப்படியோ, இப்போது, பரிதி மீது ஒரு மோசடி வழக்கு வந்து சேர்ந்திருக்கிறது. சென்னை வில்லிவாக்கத்தில் தர்ம தோப்பு என்ற அறக்கட்டளை உள்ளது. இந்த  அறக்கட்டளைக்கு சொந்தமாக அங்கு ஏழரை ஏக்கர் நிலம் உள்ளது.
அதன் ஒரு பகுதியை  பரிதி இளம்வழுதி மற்றும் அவர் உதவியாளர் கக்காரீன், வாசு, சிட்டிபாபு உள்பட 24 பேர் ஆக்கிரமித்ததாக ஒரு புகார் ஏற்கனவே கொடுக்கப்பட்டிருந்தது.

அ.தி.மு.க. ஆட்சியில், தி.மு.க. முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராக புகார் ஒன்றை கழுத்தில் கட்டியபடி ஒரு பசுமாடு வந்தால்கூட, போலீஸ் பசுமாட்டை தடவிக் கொடுத்து, புகாரை கவனமாக கழுத்தில் இருந்து எடுத்து, பதிவு செய்து, சுடச்சுட கைது செய்யவும் கிளம்பி விடுவது வழமை.
ஆனால், பரிதி மீது கொடுக்கப்பட்ட புகாருக்கு நோ, ஆக்ஷன், நோ ரியாக்ஷன்.
இந்நிலையில் அந்த அறக்கட்டளையின் அறங்காவலர் கங்கா ரெட்டி, “பரிதி விஷயத்தில் நாம் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் நடவடிக்கை  எடுக்கவில்லை” என மற்றொரு புகாருடன், உயர்  நீதிமன்றம் சென்றார். அங்கே வழக்கு பதிவாகியது. t
அதன் பின்னரே சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார், பரிதி இளம்வழுதி உள்பட 24  பேர் மீதும் 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதற்கு என்ன அர்த்தம் என்பதை நீங்களே சுலபமாக ஊகித்துக் கொள்ளலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக