செவ்வாய், 9 அக்டோபர், 2012

காவிரி: நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர தமிழகம் முடிவு

புதுடில்லி: சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி காவிரியில் தண்ணீர் திறந்து விட்டதை நிறுத்தி விட்டதால் அம்மாநில அரசு மீது கோர்ட் அவமதிப்பு வழக்கு தொடர தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பான விவகாரம் குறித்து முதல்வர் ஜெ., அமைச்சரவை சகாக்களுடன் அவசர ஆலோசனை நடத்தினார். நீதிமன்ற 
கடந்த மாதம் நடந்த காவிரி ஆணைய கூட்டத்தில் தமிழகத்திற்கு 9 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விட பிரதமர் ஆணையிட்டார். ஆனால் பிரதமர் உத்தரவையும் மதிக்காமல் மாநில அரசு காலம் தாழ்த்தி வந்தது. இதனை கண்டித்து தமிழக அரசு தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதிகள் கர்நாடகாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்து உடனடியாக தண்ணீர் திறந்து விட ஆணை பிறப்பித்தனர். இதனையடுத்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. தண்ணீர் திறந்து விடுவதால் கர்நாடக விவசாயிகள் பாதிக்கப்படுவர் என அங்கு கடும் போராட்டம் நடந்தது. மாநிலம் தழுவிய பந்த்தும் நடந்தது.

ராணுவ பாதுகாப்பு போடுங்கள்:
இந்நிலையில் திறந்து விட்ட தண்ணீரை கர்நாடக அரசு நிறுத்தி விட்டது. இது கோர்ட் அவமதிப்பாகும். எனவே மாநில அரசு மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழக அரசு தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்படும் என தமிழக முதல்வர் ஜெ., அறிவித்துள்ளார். அங்குள்ள அணையை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வரவேண்டும் என்றும் ராணுவ பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்றும் கோரப்படும் என முதல்வர் ஜெ., கூறியுள்ளார். இந்த முடிவு இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக